Header Ads



சுமுகமான நிலையில், தேர்தலின் பின்னரான காலப்பகுதி

(எம்.எப்.எம்.பஸீர்)

பொதுத் தேர்தலின்  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என  தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

  எனினும் இக்காலப்பகுதியில் 5 சிறு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும் அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  இந் நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி  சுமுக நிலையில்  நகர்வதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டார்.

 இதேவேளை,  வக்களிப்பு தினத்தன்றும், வக்களிப்பு தினத்துக்கு முன்னரும் பதிவான தேர்தல்கள் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் குறித்த மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

அவ்வந்த பொலிஸ் வலயங்கள் ஊடாக இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் குறித்த சம்பவங்களை மையப்படுத்தி ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.

தேர்தலுக்கு முன்னர், இடம்பெற்ற சட்ட மீறல்கள் தொடர்பில்  480 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் 561 பேர் அது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் 165 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.