Header Ads



சஜித் பிரேமதாசவுக்கு, ஹக்கீம் வழங்கிய அனுமதி

(செ.தேன்மொழி)

நாட்டில் மாறுபட்ட ஆட்சியை முன்னெடுப்பதாக கூறிக் கொண்டு ஆட்சியமைத்துள்ள ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் அரசாங்கம் , 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர்  காணப்பட்ட  அரசாங்கத்தை போன்றுதான் அமையப்பெற்றுள்ளது. அமைச்சு பதவிகளில் அதே மோசடிக்காரர்களே உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினல் முஜூபுர் ரஹூமான்  தெரிவித்தார்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க எவ்வாறு இனவாதத்தை பரப்பி தேர்தலில் பாரிய வெற்றிப்பெற்றாரோ , அதே போன்று தான் தற்போதைய அரசாங்கமும் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் நாட்டிற்கு எவ்வித பலனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும்  அவர் கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலை போன்று பாரியதொரு வெற்றியை பொதுத் தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மக்களுக்கு பல வாக்குறுதிகளை ஆளும் கட்சி வழங்கியிருந்தது.

1956 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.டப்லியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க எவ்வாறு வெற்றிப் பெற்றுக் கொண்டாரோ அதனைப் போன்றே சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்பி ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் வெற்றிப் பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டிற்கு வளர்ச்சியை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கப் போகின்தா? அல்லது 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற அதே ஆட்சி முறையையே மீண்டும் முன்னெடுக்க போகின்றதா ? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளை பெற்றிருந்த அதே மோசடிகாரர்களுக்கே இம்முறையும்  , பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அரசாங்கத்தில் இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதேவேளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கே பொறுப்புவாய்ந்த அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரால் துடிப்பாக செயற்பட முடியுமா? மேலும் பத்திக் , மட்பாண்டம் தொடர்பில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தொழிநுட்பத்திற்கு ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட வில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ டிஜிட்டல் முறைமைப்படுத்தல் தொடர்பில் அதிகம் பேசிவந்திருந்தாலும் ,   அவரது ஆட்சியில் அது தொடர்பில் ஒரு அமைச்சினை ஸ்தாபிக்க முடியாமல் போனமை பெரும் குறைப்பாடாக காணப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேக்கர மாகாண சபைகளின் அதிகாரங்களை மீள் திருத்தம் செய்வது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தங்களுக்கு பாரபட்சம் இடம்பெற்றதாக கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மக்களுக்கு நலனைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் நாங்கள் எமது ஆதரவை பெற்றுக் கொடுப்பதுடன் , பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம்.

கேள்வி : ஆளும் தரப்பினர் இனவாத கருத்துகளை பரப்புவதாக நீங்கள் குற்றஞ்சாட்டினாலும் , வடமேல் மாகாண ஆளுனர் மொஹம்மட் முஸாம்பில் எதிர்தரப்பினரும் இனவாத கருத்துகளை முன்வைத்தே அரசியலில் ஈடுபடுவதாக கூறியுள்ளாரே?

பதில் : ஆளுனர் மொஹம்மட் முஸாம்மிலின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அனைவரும் அறிவார்கள். அவர் தனது சுய இலாபத்திற்காக ஒவ்வொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொழும்பு நகரசபை தேர்தலில் போட்டியிட்ட போது ராஜபக்ஷர்களை கடுமையாக விமர்சித்தவர். தற்போது அவர்களுடன் இணைந்துக் கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறிவருகின்றார்.

நாங்கள் எப்போதுமே இன, மத ஒற்றுமை தொடர்பிலே பேசி வந்துள்ளோம். அனைத்து இன மக்களுக்கும் சமமான இடம் கிடைக்க வேண்டும் என்பதே எமது எண்ணம். அவரது கருத்து தொடர்பில் நாம் அவதானம் செலுத்த தேவையில்லை, காலத்திற்கு காலம் அவர் மாறுப்பட்ட கருத்துகளையே தெரிவித்து வருவார். அவரே மேலும் விமர்சிக்க நான் விரும்ப வில்லை.

கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்: தேசியப் பட்டியல் தொடர்பில் எந்தவித முரண்பாடுகளும் கட்சியில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ள பங்காளி கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களின் அனுமதியுடனே கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகளை எடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள நஸீர் அஹமட் இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , இது தொடர்பில் முடிவெடுக்க சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இவர் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவுடனே இணைந்து செயற்பட்டிருந்தார். 

1 comment:

  1. 1956ல் SWRD. பண்டாரநாயக்க என்பவர் தனிச் சிங்களம் (Whatever) போன்ற கருத்துக்களைக் கூறியே ஆட்சிக்கு வந்தார். இது வரலாறு. இதற்கு முன்னரும் பின்னரும் JR. ஜெயவர்த்தன என்பவர் ஏதோ பௌத்த சிங்கள அடிப்படையில் (பாத யாத்திரை போன்ற சுலோகங்கள்) 1977ல் 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார். மாத்திரமல்ல அதனால் அரசியல் யாப்பினையும் மாற்றி அமைத்தார். அதுவே இன்றைய இலங்கையின் சகல அடிப்படைக்கும் பெரும் சாபக்கேடாக மாறிவிட்டது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தமக்குக் கிடைத்த 2/3 பலத்தினை வைத்து ஒவ்வொரு முறையும் யாப்பினை மாற்றியமைத்தால் எதிர்காலத்தில் நாடு எங்கே போகும். இலங்கை கல்வியில் துரிதமாக மேம்பட்டு வருவதனால் இன்னும் சிறிது காலத்தில் ஆட்சி கற்ற துடிப்புமிக்க இளைஞர்களிடம் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே யாப்பினைத் திருத்துவது, சேர்ப்பது என்பன எல்லாம் இலங்கையின் சொந்த இயல்புகளுடன் ஒத்துப் போகக்கூடியவையாக இருக்க வேண்டும். 1956 க்கு முற்பட்ட இலங்கைக்கும் 1960 க்குப் பிற்பட்ட இலங்கைக்கும் சிங்கப்பூர் மலேசியா மற்றும் இன்னும் இக்காலகட்டத்தில் அபிவிருத்தி அடைந்த எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த வளர்ச்சியும் எந்தத் துறையிலும் கிடையாது. ஏதோ கடவுளின் புண்ணியத்தால் சாப்பிடுகின்றோம் படிக்கின்றோம் ஏதோ கிடைத்த இடங்களில் தூங்கவும் செய்கின்றோம். தவிர எமது நாட்டில் 50% ஜனநாயகம் மாத்திரம் உண்டு. 80% பௌத்த சிங்களவரகளைக் கொண்ட இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு பிரச்சினை உண்டு என்று குமுறுகின்றனர். உண்மைதான். அதே நேரத்தில் பௌத்த குருமார்களும் தற்போது இனவாதத்தினை கக்கிக் கொண்டிருக்கும் புதிதாகத் தோன்றிய சிங்கள இனத்துவக் கட்சிகளும் அற்ப இலாபத்திற்'காக சிங்களவரகளுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று கூவிக் கொண்டு திரிகின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் தங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்று மட்டும் சொல்ல மாட்டார்கள்.

    இன்று எமது நாட்டிற்குத் தேவையானவை போதை மருந்துப் பாவனை உட்பட மற்றும் சமூகத்திற்கு எதிரான சகல குற்றங்களும் அழிக்கப்பட்ட நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், பொது மக்களுடைய பாதுகாப்பு, எதிர்க்கட்சிகளுடைய அனுசரனையுடன் தோற்றுவிக்கப்படக்கூடிய அரசமைப்பு மற்றும் நலிவற்றோருக்கான வசதிகள் போன்ற பல்வேறுஅம்சங்களை அரசு திட்டமிட்டு அமுல்படுத்தாவிட்டால் இன்னும் சில காலங்களின் பின்னர் மீண்டும் கற்ற மக்கள் கூட்டம் "அரசியல் சவுக்கை" கையில் எடுக்கக்கூடிய நிலைமை உண்டாகலாம்.

    In 1956. SWRD. Bandaranaike came to power with views such as Sinhala only (Whatever). This is history. Before and after this, JR. Jayawardene came to power in 1977 with a 2/3 majority on some Buddhist Sinhala slogans. Not only that, but he also changed the political system. That is what has become the great curse on all the foundations of Sri Lanka today. Where will the country go in the future if every party that comes to power keeps the 2/3 strength they have and changes every time? With the rapid development of education in Sri Lanka, there is an opportunity to reach out to the vibrant youth who have come to power in a short period. Therefore, the editing and adding of Constitution should be in line with Sri Lanka's nature. Sri Lanka before 1956 and Sri Lanka after 1960 did not have any significant development in any field comparable to Singapore, Malaysia and any other developed country during this period. Something by the grace of God we eat and study and sleep in places where something is available. Besides, our country has only 50% of democracy. In Sri Lanka, where 80% of the population is Buddhist, Tamils ​​and Muslims alike complain that they have problems. It's true. At the same time, some Buddhist clergies and the newly formed Sinhala ethnic parties, which are now spewing racism, can be seen wailing that the Sinhalese are in trouble for meagre profits. But they will not just say what problems they have.

    What our country needs today is the elimination of all crimes against society, including drug abuse, and the ability of the re-educated masses to take up the "political whip" some more time later if the government does not plan and implement various aspects such as plans for economic development, public security, a constitution that can be created with the support of the opposition.

    ReplyDelete

Powered by Blogger.