Header Ads



சூடுபிடித்திருக்கும் தேசியப் பட்டியல் விவகாரம், தாருஸ்ஸலாமில் ஹக்கீம் மந்திராலோசனை


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி சூடுபிடித்திருக்கம் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ்ஸலாம்” தலைமையகம் கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாவட்டங்கள் உட்பட ஏனைய சில மாவட்டங்களையும் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது.


குறிப்பாக, நடந்து முடிந்த இந்த பொதுத் தேர்தலில்; பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ள தொகுதிகளிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தீவிர ஆதரவாளர்கள் குழுக்களாகவும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் சகிதமாகவும் கட்சித் தலைமையகத்திற்கு வந்து கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து தேசியப் பட்டியலில் இடம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர்.


9ஆவது புதிய பாராளுமன்ற அமர்வுக்கு முன்னதாக மிகவும் முக்கியமானவையாக கருதப்படும் இந்த நாட்களில் தலைமையகத்திற்கு வந்து செல்லும் தலைவர் ஹக்கீம், தம்மிடம் விடுக்கப்பட்டுவரும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து வந்ததோடு, செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் தமது கட்சி முக்கியஸ்;த்தர்களுடன் கலந்துரையாடியும் வந்தார்.


இதேவேளையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகத்தில் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது செயலாளர் நிசாம் காரியப்பரும் உடனிருந்தார்.

1 comment:

  1. நிசாமுக்கு நெத்தியடி

    எப்படி எங்கட சானக்கியம்

    ReplyDelete

Powered by Blogger.