Header Ads



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களது , முதலாவது பாராளுமன்ற உரையின் சுருக்கம் .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரக்காத்துஹூ 

கௌரவ சபாநாயகர் அவர்களே !

புத்தளம் மக்களின் பிரதிநிதி என்ற வகையிலே எனது கன்னி உரையை ஆற்றுவதற்கு இங்கு வந்துள்ளேன் .

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை கட்சிகளால் , புத்தளம் தொகுதிக்கு உறுப்பினர் கிடைக்கவும் இல்லை , சொல்லும்படியான அபிவிருத்திகள் கிடைக்கவும் இல்லை .

நமக்கு கிடைத்தது எல்லாமே அனல் மின்சாரம் , அருவக்காடு குப்பை போன்ற அழிவை ஏற்படுத்தும் அபிவிருத்தி திட்டங்களே .

இதன் மூலம் மக்களுக்கு சூழல் மாசடைவும் , விவசாயங்களில் பாதிப்பும் நிகழ்ந்தது .

அனல் மின்சாரத்தால் மானிய விலைக்கு மின்சாரம் தருவதாக சொன்னார்கள் , அதுவும் கூட நம் மாவட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை .

மக்கள் வீடு வாசல்களில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நிலைமையே கடந்த காலங்களில் உருவானது.

இதனால் தான் , இந்த முறை தேர்தலில் மக்கள் பெரிய கட்சிகளை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்தார்கள் .

இந்த அடிப்படையிலே ஐக்கிய தேசிய கட்சி , சுதந்திர கட்சி , முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று அனைவரும் ஒரே அணியில் சேர்ந்து போட்டியிட்டோம் .

இதன் ஊடாகவே , இந்த விகிதாசார தேர்தல் முறை மூலம் ஒரு உறுப்பினரை , முதன் முதலாக , நம்மால் பெற முடிந்துள்ளது .

இனி வரும் காலங்களிலும் , நமது உறுப்புரிமை  என்பது பாதுகாக்கப்பட்டு , தொடராக நமக்கு உறுப்பினர் கிடைக்க வேண்டும் .

ஜனாதிபதி சொன்னது போல , புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் போது புத்தளம் மண்ணுக்கு நன்மையளிக்கும் வகையிலும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த சபையிலே வேண்டுகிறேன் .

அது போல , இனி வரும் காலங்களிலாவது அபிவிருத்தி என்ற பெயரிலே , அழிவை உண்டாக்கும் திட்டங்கள் புத்தளம் வருவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த சபையிலே கேட்டு , எனது உரையை முடிக்கிறேன் .

சந்தர்ப்பம் அளித்த சபாநாயகருக்கு , பாராளுமன்றத்தினருக்கும் நன்றிகள் .

இவ்வாறே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களது உரை அமைத்திருந்தது .

No comments

Powered by Blogger.