Header Ads



இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்


(இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை  நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி சனிக்கிழமை தொடக்கம் இப்பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்     அட்மிரல் ஜயநாத் கொழபகே தெரிவித்தார்.

  எதிர்வரும் 8ம் திகதி டுபாய் நாட்டில் இருந்து  600 இலங்கை பிரஜைகள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்கள். அத்துடன்  மாலைத்தீவு, அவுஸ்ரேலியா,  கட்டார், ஓமான், பஹ்ரைன்,   மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா  ஆகிய  நாடுகளில் வசித்த இலங்கையர்கள்  நாட்டுக்கு தொடர்ச்சியாக  அழைத்துவரப்படவுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினர் அதிகளவில் ஈடுப்படுத்தப்படவுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை  மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இடைக்காலத்திற்கு பயணிகளை அழைத்து  வரும் நடவடிக்கை  இடைநிறுத்தப்பட்டுள்ளது.    

No comments

Powered by Blogger.