Header Ads



முஸ்லிம் மக்கள் மீது குத்தப்பட்டுள்ள சஹ்ரான் முத்திரையை, அப்புறப்படுத்த வேண்டியது நீதியமைச்சரின் கடமை


பொது மக்களிடையே காணப்பட்ட பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையின் நீதியமைச்சர் பதவியை மொஹமட் அலி சப்றிக்கு வழங்கியிருப்பதாக கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

மொஹமட் அலி சப்றி நீதியமைச்சில் நேற்று கடமைகளை பொறுபேற்கும் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரே பாடசாலை கட்டமைப்பு, ஒரே சட்டம் உருவாக்கப்படுமாயின் எதிர்காலத்தில் சஹ்ரான்கள் உருவாகாமல் இருப்பதற்கு சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

முஸ்லிம் மக்கள் மீது குத்தப்பட்டுள்ள சஹ்ரான் முத்திரையை அப்புறப்படுத்த வேண்டியது நீதியமைச்சரின் கடமை எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. சஹ்ரான் உருவாக்கப்பட்டது மத்ரசாவில் இல்லை. அவனை உருவாக்கி, போசித்து வங்கிக் கணக்கில் பணம் இட்டு குண்டுத்தாக்குதலை நடத்தி அவன் மீது பலியை போட்டு அப்பாவி முஸ்லிம்களை ப லி வாங்கியது யார் என்பது உலகம் அறிந்த ரகசியம் .

    ReplyDelete
  2. Zahran group never represented the Muslim community of Sri Lanka. as a community they very strongly condemn their stupidity and vandalism, we hate and reject them and those whom were behind them...

    ReplyDelete
  3. ஜாதிக விமுத்தி பெரமுன (JVP) வினால் அரசுக்கு எதிராக 1971 அளவில் ஆரம்பித்து 1990 வரை நீண்டு சென்ற கலவரத்தினால் சிங்கள பொது மக்களுக்கு எந்தக் கெட்ட பெயரும் ஏற்படவில்லை. தொடர்ந்து 1976லிருந்து 2008ம் ஆண்டுவரை தமிழ்ப் புலிகளால நாட்டிற்கும் அரசுக்கும் எதிராக ஏற்படுத்தப்பட்ட பெரும் கலவரத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித கெட்ட பெயரும் ஏற்படுத்தபபடவில்லை. ஆனால் சஹ்ரானுடைய அசம்பாவிதத்திற்கு முஸ்லிம மக்கள் பொறுப்பல்ல பொறுப்பல்ல என்று இலட்சம் தட்வை பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்ட நிலையிலும்கூட ஏன் இன்னமும் அதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். யாராவது விளக்கம் தர முடியுமா?

    ReplyDelete
  4. Well said Brother Suhood...

    ReplyDelete

Powered by Blogger.