Header Ads



நடந்து முடிந்த தேர்தலை கட்சியின் தோல்வியாக நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாகக் கருதுவோம்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன மீண்டும் தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் இன்று -29- இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


நடந்து முடிந்த தேர்தலை கட்சியின் தோல்வியாக நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தற்போது சந்தர்ப்பம் எழுந்துள்ளதாக ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, கட்சி ஆதரவாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் காலம் உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. People will give more lessons to you and your party, still not understand peoples answer

    ReplyDelete
  2. நாட்டின் எதிர்கால அரசியல் சீர்திருத்தத்திற்காக நிச்சயமாக பலம் வாய்ந்த எதிர்க்கட்சி மிக மிக முக்கியமானதாகும். இந்நிலையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டியது காலத்தின் தேவையாகும். கட்ந்த தேர்தலில் முக்கியமான பல ஜனநாயகவாதிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். எதிர்க்கட்சியின் கை ஓங்கும்போது நிச்சயமாக நாட்டின் ஜனநாயக பாரம்பரியம் நிச்சயம் பாதுகாக்கப்படும். இதற்கு உதாரணம் JR. ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலம். மக்களுக்காகவே ஆட்சி. ஆட்சிக்காக மக்கள் அல்ல. எனவே சம்பந்தப்பட்டவரகள் முதலில் இதனை உணர்ந்து ஐக்கிய தேசியக கட்சியினையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் மீள இணைத்து மக்களுக்கு இல்லாவிட்டாலும் நாட்டின் ஜனநாயகத்தினைக் காப்பதற்ற ஏதாவது செய்யவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.