Header Ads



நாகரீக சமூகத்தை ஏற்படுத்தப் போகிறேன் - மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய அரசாங்கத்தின் கீழ் நாட்டை அபிவிருத்திசெய்வதற்கும் வளமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தன்னை அர்ப்பணிப்பு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாகரீக சமூகத்தை ஏற்படுத்த முயலப்போவதாகவும் வலியுறுத்தியுள்ள அவர், தேர்தல் வெற்றிக்கு தனது நன்றிகளையும் கூறியுள்ளார்.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அனைத்து அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை மற்றும் நாட்டில் அமைதியான தேர்தலை உறுதி செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

5 comments:

  1. இந்த நாட்டு மக்கள் மூன்று அல்லது நான்கு பரம்பரைகளுக்கு மறக்க முடியாத 'சேவைகளைச்' செய்த முன்னாள் சனாதிபதி மை3 நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணம் செய்யப் போகிறாராம். அப்படியானால் எங்கள் ஊரில் காலையில் மரங்களில் ஏறி தேங்காய் பறித்துவிட்டு மாலையில் பொதுமக்களின் பொருட்களைக் களவாடச் செல்லும் பல திருடர்களையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்தலாம்.

    ReplyDelete
  2. கையிலிருக்கும் இரண்டு தங்க மோதிரங்களை எங்கிருந்து களவாடப்பட்டவை என சரியாக அறிந்து கொள்வதற்கு உளவுத்துறைக்கு பொறுப்புக் கொடுத்தால் அவற்றின் உண்மைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  3. Hello Mr. Ex-President,
    Please stop everything now and settle down to witness what and what good actions are taking place during this period. we are confident that Hon. Rajapaksas will prove to the world they are capable of fulfilling their promises.

    ReplyDelete
  4. இழுத்து கிட்டு இருந்தாலும் பதவி ஆசை போகாத ஒரே இனம் அரசியல் வாதிகள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.