August 29, 2020

நான் இஸ்லாத்தை நம்புகிறேன், எனினும் இலங்கையின் கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டுள்ளேன் - அலி சப்ரி


குழந்தை திருமண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதி அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.


அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் மாநாயக்க தேரர்களை இன்று சந்தித்து ஆசி பெற்றக்கொண்ட நீதி அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,


“இந்த நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்யவே நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோது சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டேன்.


நான் இஸ்லாத்தை நம்புகிறேன், எனினும் இலங்கையின் கலாச்சாரத்தில் கலாச்சார ரீதியாக வளர்க்கப்பட்டுள்ளேன்.


இந்நிலையில், பெரும்பான்மையானவர்கள் சிறந்த இலங்கையர்களாக ஒன்றாக வாழ விரும்புகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

10 கருத்துரைகள்:

இஸ்லாம் தனது எந்த ஒரு கருத்துரைகளிலும் ஆண்,பெண் திருமண வயதெல்லையை கட்டுப்படுத்தவோ அல்லது மட்டுப்படுத்தவோ இல்லை.புனித திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பன இதற்கு சான்றாக உள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை.ஆனால் மனித சமுதாயத்தின் ஆண் பெண் திருமணத்தின் அவசியம் பற்றியும் அதன் தேவை பற்றியும் சமுதாயத்தின் ஒழுக்க விழிமியன்கள் அதனால் எவ்வாறு பாதுகாக்க படுகிறது என்பது பற்றியெல்லாம் நிறையவே வாதிடுகிறது.இருந்தும் ஆண் பெண் திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்த வில்லை.விருப்பமானவர்கள் செய்து கொள்ளலாம்,செய்துகொள்ளாமலும் விடலாம்.ஏனென்றால் ஆண் பெண் திருமணம் செய்வதற்கு சில தகமைகளை இஸ்லாம் வகுத்துள்ளது.இத்தகமைகளை மனித சமுதாயத்தின் எல்லா மக்களும் கொண்டிருப்பார்கள் என்று உத்தரவாதம் செய்ய முடியாது அதனால் தான் திருமணத்தை இஸ்லாம் கட்டாய கடமையாக விதிக்கவில்லை.மனிதனின் பாலியல் ரீதியான உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி,மட்டுப்படுத்தி அதை ஒழுங்கு படுத்துவதற்கு திருமணம் அவசியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.திருமணத்தின் பிரதான நோக்கமும் அதுதான்,அதைத்தான் இஸ்லாமும் வலியுறுத்தி நிற்கின்றது.எனவே இங்கு பாலியல் ரீதியான உணர்வுகள் பெரும்பாலும் மனிதன் பருவ வயதை அடைகின்ற போது அவன் உணரத்தலைப்படுகின்றான் இவ்வுணர்வு மனிதனுக்கு மனிதன் வித்தியாசமானதாகும்.சிலபேருக்கு கூடியதாக சிலபேருக்கு குறைந்ததாக அவரவர் உடல் உள ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவைகளால் அவ்வுணர்வு உருவாகி இருக்கும்.இவ்வுணர்வுக்கு வடிகானக இருந்து அவனை வெளிப்படுத்துவது ஆகுமான திருமணமேயாகும்.இதை மனித சமுதாயத்தின் வயதை எல்லையாக கொண்டு தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமானது சரியானது என்பதை கெளரவ நீதி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த பாலியல் தேவைப்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டு வழங்கப்படுவது மனித சமுதாயாத்திற்கு இன்றியமையாததாகும்.அதனால்தான் இஸ்லாம் அதற்கு வயதுக்கட்டுப்பாட்டை விதிக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

Hon. Minister, please obtain statistics of marriages and divorces race wise from the Registrar General for various age groups depicting underage and accepted marriage age and kindly publish in mass media so that community leaders can help people to get over this problem and help the nation.

Yes Very Good . First of All stop Child marriage and SPECIALLY Child ABUSES in Sinhalese communities...( Sinhalies percentage is very high compare to Tamils).

Be just, Wise, and fare amoung all communities
Good Luck Mr. Shabry.

இது எதில போய் முடியப்போகுதோ.

இதனைச் சொல்பவர் அல்லது எழுதுபவர் எதனைக் குறிப்பிட வருகின்றார் என்பதில் தெளிவு இல்லை. எழுதும் விடயங்கள் தெளிவாக இருத்தல் வேண்டும். அல்லது பத்திரிக்கையின் பத்திதான் வீணாகும்.

All his statments are to satisfy the wills of majority people. If he true with justice,, also create a system in law to arrest racist who conducted Aluthgama, Digana, Ampara and Minuwangoda violence and murder.

But these will not satisfy the majority so he will avoid such.. but using the matters muslim issue raised by racist and trying utilize those matters, so that he will be loved by them.

We trus in Allah and we ask him alone for justice.

பாலியவயதுத் திருமணத்தை முஸ்லிம்களுடன் மட்டும் சம்பந்தபடுத்துவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதே போல் அதனை நமது தலையில் நாமாகவே போட்டுக்கொள்ளவும் கூடாது. அந்த விடயத்தில் நாங்கள் ஏனைய சமூகங்களை விடக்குறைவாகத்தான் உள்ளோம். எனவே தயவு செய்து மாடறுப்பை மார்க்கம் போன்று தூக்கிப்பிடித்து மற்றவர்கள் மறைந்திருந்து நன்மைபெற வழிசமைத்தது போன்றல்லாமல் நிதானம் அவசியம். மறு புறத்தில் திருமண விவகாரம் இஸ்லாத்தில் சமூகவியல் விடயமாகவே கையாளப்படுவதால் கால சூழ்நிலைகளுக்கேற்ப மறுபரிசீலனை செய்வதிற் தவறில்லை. இருப்பினும் இவ்விடயம் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்தால் நிதானமாகக் கையாள்வோம்.
இன்றைய சூழலில் இளவயதுத் திருமணம் முஸ்லிம்கள் மத்தியில் மிகக் குறைவு என்பதாலும், அவ்வாறு நடைபெறும் திருமண்ங்களில் விவாகரத்துக்களும் அதிகம் சாத்தியமாகுவதால் சாதகமாகக் கையாள்வோம் என்பது எனது அபிப்பிராயம்...

அல் குர்ஆன்
அதில் இருப்பது தான் இஸ்லாமிய சட்டமும் மனிதனுக்கும் அத்தியவசியமான உடல்நலம் பேணும் விஞ்ஞான தத்துவமும் அதன் உன்மையும் மனித குலத்திற்கு நன்மையே.
இது பொதுவான சட்டம்

Kuffar can bring LAWS that goes against to the permission of Allah, but it should not come from a Muslim.

When Allah and his messenger did not put an age limit for marriage, A true muslim will not try to put a limit. From the history of Islam and history of our early genertion in Srilanka (regardless of race), when a girl reach purberty, she was considered qualified for marriage but not a must.

NO TRUE MUSLIM will try oppose the law of Allah and his messenger. They will do only to satisfy the Kuffar of this land and the west interest only.

Even if such rules are applied in so called Muslim countries, we consider the sunnah of Rasoolullah as guaidance for our life in this world.

Why not this man workd to avoid, Alcohol, Zina like wrong issues in this country ? but playing with Muslims rights ?

​பெரும்பாலான ஏனைய அமைச்சர்களைப் போல் வாயை மூடிக் கொண்டு பணியில் கவனம் செலுத்துவது தான் தற்போதைய நிலைமயைில் மிகவும் பொறுத்தமாக இருப்பதாகத் தெரிகிறது. அதை அலிசப்ரியும் பின்பற்றினால் பெரும்பாலான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

Post a comment