Header Ads



ஜனாதிபதி கோத்தாபயவுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு - கொரோனாவை வெற்றிகரமாக கையாண்டவர் என புகழாரம்


அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் மார்க் டி. எஸ்பர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது எஸ்பர், கொவிட் -19 தொற்றுநோயை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவுக்கு ஜனாதிபதி கோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.


அத்துடன் பொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகளை மதிப்பாய்வு செய்து, இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

1 comment:

  1. இந்த செய்திகளைப் கூர்ந்து அவதானிக்கும் போது ஓருண்மை புலபடுகின்றது. அதாவது அமெரிக்காவின் சொந்த நலத்தை அமெரிக்கா இலங்கையில் திணித்துள்ளமையும் அதைச் சீரணிக்கும் திறன் இலங்கையிடம் இல்லை என்ற அம்சமும் அதில் மறைந்திருக்கின்றது. போகப்போக அது வௌியாகும்.

    ReplyDelete

Powered by Blogger.