August 13, 2020

முஸ்லிம்கள் ஒரு புதிய பாதையில், பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் - நீதி அமைச்சர் அலி சப்ரி


இந்நாட்டின்  அரசியலமைப்பின் இறையாண்மைக்குப் பாதுகாவலனாக இருப்பதோடு எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்திற்கும் சகோதரத்துவத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக என்று தெரிவித்தார். நீதி அமைச்சர் அலி சப்ரி 

கண்டியில் உடரட்ட இராசதானியாக இருந்த காலத்தில் இராஜசிங்க மன்னன் பாவிக்கப்பட்ட ராஜ மண்டபம் என வர்ணிக்கப்படும் மகுல் மடுவத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்~ பிரதமர் மஹிந்த ராஜபக்~ முன்னிலையில் இம்மண்டபத்தில் அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு கண்டி லையின் ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட  முதலாவது வரவேற்பு வைபவமும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வு  மத்திய மாகாண அரசியல் ஒன்றியமும் மற்றும் கண்டி லையின் பள்ளிவாசல் நிர்வாகமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சர் அலி சப்ரி உரையாற்றும்  இங்கு போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

நான் ஜனாதிபதி முன்னிலையில் நீதி அமைச்சராகப் பதவியேற்றது ஒரு  குறித்த சமூகத்திற்காக மட்டும் அல்ல . ஒரு சனக் கூட்டத்திற்கு அல்ல . இது முழுநாட்டுக்காக வழங்கப்பட்டதாகும். நாங்கள் இந்நாட்டுக்கு மிகவும் ஆதரவானவர்கள். நாங்கள் இந்நாட்டின் அரசியலமைப்புக் கொள்கைக்கு உடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்நாட்டின் அரசியமைப்பு இறையாண்மைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நான் முதல் தடவையாக ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்கும் இரண்டாவது தடவையாக நிதி அமைச்சராக பதவியேற்கும் இந்நாட்டின் அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கவராக இருக்க வேண்டும் என இரமுறை சத்தியப்பிரமானம் செய்துள்ளேன்.  

எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு எதிராகவும்  ஐக்கியத்திற்கு எதிராகவும் சக  சகோதரதத்திற்கு எதிராகவும்  செயற்படப் போவதில்லை என்று நான் ஆரம்பத்திலே உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது தொடர்பாக எந்த சந்தேகங்களும் கொள்ளத் தேவையில்லை. 

இந்நாட்டில் மக்களைப் பிரிப்பதற்கு சிலருக்கு தேவை இருக்கிறது. முஸ்லிம் சமூகம்  கிறிஸ்தவ சமூகம்  இந்து சமூகம் ஆகிய சமூகங்களுக்கிடையில் ஒன்றிணைந்து  சகவாழ்வை ஏற்படுத்த முற்படும் போதை அதைச் சீர்குலைப்பதற்கு பணத்திற்காக செயற்படும் ஒரு சில மனிதர்கள் சமூக விலைத்தளங்களில் பிழையான சித்தரிப்புக்களில் ஈடத் தொடங்கியுள்ளனர். இந்நாட்டில் முஸ்லிம்கள் 1100 வருடங்கள் கௌரவத்துடன் வாழும் முஸ்லிம் சமூகமாகும். 

முஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாதிகளை இல்லாமற் செய்வதில் வேறு எவரும் இருக்க முடியாது.  அது ஏனென்றால்  அடிப்படைவாதிகள் இருக்கும் வரையிலும் எங்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாது. அந்த அடிப்படைவாதிகள் இருக்கும் வரையிலும் எங்களால் சுதந்திரமாக வாழ முடியாது. அந்த வகையில் நாங்கள் அதற்காக முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம். யாராவது சரி உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருப்பார்களாயின் கடைசிவரையிலும் சட்டத்திற்கு முன் கொண்டு வந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். அதற்கான உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்குகின்றோம் என்று அமைச்சர் உறுதியுடன் தெரிவித்தார் 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருடைய என் மீது நம்பிக்கையின் பிரகாரம் ஒரு நீதி அமைச்சராக நியமனம் செய்து இருக்கிறார்கள். 

விசேடமாக சிறுபான்மையின முஸ்லிம்கள் ஒரு புதிய பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் பயணத்தில் சக்திமிக்கவர்களாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். இன ரீதியிலான அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி தேசிய கொள்கையுடைய அரசியலில் பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செல்வோமாயின் எங்களுக்கான எதிர்காலம் இருக்கிறது. இது மிகவும் பெறுமதியானது என  நாங்கள் நம்புகின்றோம்.  அந்தப் பயணத்தில் முஸ்லிம் சமூகமோ அல்லது தமிழ் சமூகமோ இணைந்து கொள்ளும் போது தேசிய கட்சிகளுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே அந்தப் பொறுப்பை பிரதான கட்சிகள் செய்ய வேண்டும். இதற்கு எடுத்துக் காட்டாக   ஜனாதிபதி மற்றும்; பிரதமர் ஆகியோர் என்னை நியமனம் செய்துள்ளனர். அவர்கள் எங்கள் எல்லோரையும் ஒரே சமனாக மதிக்கின்றார்கள்.   இலங்கையைக் கட்டி எழுப்புதவதகாகவும்  இலங்கையிலுள்ள சர்வ சமயங்களும் சிறந்தோங்கச் செய்வதற்காகவும் எல்லோரையும் ஒன்றிணைத்துக் கொண்டு எவ்வாறு புதிய நாட்டை உருவாக்குவது நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய நாட்டை எப்படி உருவாக்குவது என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருடைய கொள்கையும் திட்;டமும் ஆகும்.

அந்த வகையிலேயே இலங்கையில் முதல் தடவையாக ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்மார்கள் நியமனம் செய்வதற்கு  மூன்று நாட்களுக்கு முன்னரே அமைச்சின் அலுவலகம், அவ்வமைச்சின் செயற்பாடு, எதிர்பார்ப்புக்கள் அவ்வமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்  அனைத்தையும் தெளிவுபடுத்தி சிறந்த முறையில் வர்த்தகமானி அறிவித்தலை பதிப்பித்து  வெளிக்கொணர்ந்துள்ளார். இது ஒரு நல்லதொரு முன்னெடுப்பாகும்.  எனவே நாம் இலங்கையர் என்ற வகையில் இந்நாட்டை எல்லோரும் சேர்ந்து கட்டி எழுப்புவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இக்பால் அலி

2 கருத்துரைகள்:

தேசிய கொள்கையுடைய அரசியலில் பயணம் செய்யும் தங்களுக்கு அமைச்சு வழங்கும் போதும் கூட சதி நடந்ததாகக் குற்ப்பிட்டிருந்தீர்களே.

All the best. As you know innocent people should not be charged without solid evidence in connection with Easter attacks.

Post a comment