Header Ads



தலதா மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு, பௌத்த பெரும்பான்மையினத்திற்கான தெளிவான சமிக்ஞை - பாக்கியசோதி

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை கண்டி தலதாமாளிகையில் பதவியேற்றுக்கொண்டிருப்பதானது சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்திற்கான முதன்மைத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞையேயாகும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று  புதன்கிழமை கண்டி தலதாமாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இதுகுறித்து கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேலும் கூறியிருப்பதாவது:

கண்டி தலதா மாளிகை மதம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கின்றதொரு தலமாகவே காணப்படுகின்றது. எனினும் யாரிடம் தந்ததாது இருக்கின்தோ அவர்களே நாட்டை ஆளவேண்டும் என்ற அடிப்படையிலான தலதா மாளிகையின் பின்னணிக்கதையையும் நோக்கவேண்டும். எவ்வாறெனினும் தலதா மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டிருப்பதானது சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்திற்கான முதன்மைத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞையேயாகும்.

அமைச்சர்களும், இராஜாங்க ...

தற்போதைய அரசாங்கம் அதன் தேர்தல் பிரசாரசெயற்பாடுகளை தீவிர சிங்கள பௌத்தவாதத்தை மையப்படுத்தியே மேற்கொண்டது. அவ்வாறிருக்கையில் தற்போது அரசாங்கம் மிகவும் பாதுகாப்பானதொரு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நிலையில், அதனைப் பயன்படுத்தி அனைவரையும் புறக்கணிக்கும் விதமாக அல்லது நிரந்தரமாகவே இரண்டாந்தரப்பிரஜைகளாக்கும் வகையில் அவர்கள் அதிகாரத்தை விரிவாக்கப்போகின்றார்களா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. எனினும் அவர்கள் அவ்வாறு செயற்பட மாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

1 comment:

  1. இந்துத்துவ பாசிச கொள்கையை கடைப்பிடிக்கும் ( இந்து மதம் பற்றிய தர்க்கமல்ல) மோடி அயோத்தில் பாபர் மஸ்ஜிதை இடித்து இராமர் கோயில் கட்டுவதை ஆமோதிக்கும் நீங்கள் எல்லாம் தலதா மாளிகையில் அமைச்சரவை நியமனம் செய்ததை கொச்சைப்படுத்துகிறீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.