Header Ads



மாவனெல்ல என்ற கோட்டையை கைப்பற்ற, முடியாதென்ற நிலையை மாற்றியமைத்துள்ளோம் - கனக ஹேரத்

இன்னும் சில நாட்களில் மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும். இதற்குத் தேவையான பெரும்பான்மை மற்றும் தேவையான சட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.

இது மாவனெல்ல மக்களுக்கு ஒரு நல்ல செய்தி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுத் தலைவர் கனக ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் இந்த முறை கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் அவர் பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது.

2020 பாராளுமன்றதத்தேர்தலில் வெற்றிபெற எங்களுடன் இணைத்துச் செயற்பட்ட அனைவரையும் வாழ்த்து கிறேன். 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மாவனெல்ல பகுதியை வென்றுள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பாட்டிலிருந்த இந்த கோட்டையை வேறு எந்தக் கட்சியினாலும் ஒருபோதும் வெல்ல முடியாது என பலர் நினைத்தார்கள். நாம் இன்று இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வென்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் இன மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இந்த வெற்றிக்காக அணிதிரண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியாக இணை ந்து குறித்த பிரதேச மக்களுக்குச் சேவை செய்வது போலவே கேகாலை மாவட்டத்திற்கும் சேவை செய்வதற் காக ஒரு குழுவாகத் தொடர்ந்து பணியாற்றுவோம்.

அதே போல மாவனெல்ல பிரதேசத்திலுள்ள அனைத்து குறைபாடுகளையும் இந்த அரசாங்கத்தால் நிவர்த்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.