Header Ads



நீதிபதி அப்துல் அசீமின் முன்மாதிரி

ஒரு மூதாட்டி நடக்க முடியாத தள்ளாத வயது அவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை ... வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட நீதிமன்றத்தை நாடி புகாரளிக்க முடிவு செய்து மாவட்ட நீதிமன்றம் அலுவலகம் வருகிறார்.

படிகளில் ஏற முடியவில்லை படிகளில் அமர்கிறார் நடக்க இயலாமல் தகவல் டவாலி மூலமாக மாவட்ட நீதிபதிக்கு (DM) தகவல் செல்கிறது.

மாவட்ட நீதிபதி மாடியிலிருந்து இறங்கி வருகிறார் மூதாட்டி அமர்ந்திருந்த படிகளில் மூதாட்டி அருகே அமர்கிறார்.

அந்த இடம் நீதிமன்றமாக மாற நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை பரிவுடன் ஆரம்பிக்கிறது.

படிக்கட்டுகளே நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை ஆரம்பமாகிறது நீதிபதி ஆவணங்களை கேட்கிறார்

மூதாட்டியும் தனக்கு ஓய்வூதியம் கிடைக்காத ஆவணங்களை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கிறார். அந்த இடத்திலேயே உடனடியாக விசாரணை செய்து அந்த மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்க தீர்ப்பளிக்கிறார்.

மாவட்ட நீதிபதி (DM) பெயர் : அப்துல் அசீம்

மாவட்டம் : புவன் பள்ளி

மாநிலம் : தெலுங்கானா:

4 comments:

  1. மனிதர்களை மதிக்கும் அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கிய இந்த நீதிபதி போல் எங்கள் நாட்டிலும் நீதிபதிகள் அவருடைய நடத்தையை முனமாதிரியாகக் கொண்டால் நாடு துரிதமாக முன்னேற்றமடையும்.அப்பாவி மக்களின் பிரார்த்தனைகளும் இந்த நாடு முன்னேற அவசியம் தேவை என்பதை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் விளங்கி நடந்தால் அதுவே முன்னேற்றம் தான்.

    ReplyDelete
  2. உமரிய ஆட்சியின் எச்சங்கள்.

    ReplyDelete
  3. கண்கள் கலங்குகின்றன. மற்றைய நாடுகளை விடுங்களேன். எமது நாட்டில் எங்கேயாவது இப்படியான அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா? கீழ்மட்ட பொதுமக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதானது இலங்கையின் ஒவ்வொரு மாவட்ட, பிரதேச அலுவலகங்களிலும் மற்றும் நீதிமன்றங்களின் வளாகங்களிலும் நாள்தோறும் காணக்கூடிய நிகழ்வுகள். அதிகாரிகள் பொதுமக்களின் இடத்திற்கு வராவிட்டால் நிலைமை தொடர்ந்து இவ்வாறே இருக்கும். சம்பந்தப்பட்டவர் இறந்து அழியும்வரை ஏன் அதன்பின்னர்கூட அவருக்கு நீதி கிடைக்கவே கிடைக்காது.

    ReplyDelete
  4. What a Great example for SriLanka and All..

    ReplyDelete

Powered by Blogger.