Header Ads



சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை, வழி நடத்தவே வந்துள்ளேன் - அலி சப்ரி


- ஹனான் -


இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள் நுழைந்து செயல்படுவதன் ஊடாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.


மேலும் கூறியதாவது-, நாட்டில் இன்னும் 20 அல்லது 30 வருடங்களுக்கு ராஜபக்‌ஷ ஆட்சி தொடரும். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஐந்து சதவீதமளவே பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர். எனினும் பொதுத் தேர்தலில் அதை விட சிறந்த முறையில் வாக்களித்துள்ளனர்.


ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ 68 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என்றும் பொதுத் தேர்தலில் 137 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என்று நான் கூறிய போது சிலர் சிரித்தார்கள்.


தேசிய பட்டியல் மூலம் எம். பி. பதவியையோ அமைச்சர் பதவியையோ நான் கேட்கவில்லை. ஜனாதிபதியே இப்பதவியைத் தந்தார்.


தேசிய ரீதியாக நாட்டு மக்களுககு சேவை செய்யவே எனக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.


சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன். சில விடயத்தில் விட்டுக்கொடுப்பு அவசியம். இனவாதம் பேசுவதில் பயனில்லை.


களவு செய்து பணம் சம்பாதிக்கவோ, கட்சி மாறி பணம் சம்பாதிக்கவோ நான் வரவில்லை. பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். பதவிகள் அல்லாஹ் தந்த அமானிதமே.


நாம் ஒவ்வொரு நாட்டினதும் வரலாற்றினைப் புரட்டிப்பார்க்கின்ற பொழுது அந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினை எதிர்த்து முட்டி மோதி வெற்றிபெற்ற வரலாறு கிடையாது.  

3 comments:

  1. பதியுதீன் மஃமூத் அவர்கள் தன்னைச்சந்திக்க வரும் முஸ்லீங்களை தன்னசை்சந்திக்கும் நேரத்திலாவது தொப்பியை அகற்றி வைக்குமாறு கோருவார் என அவருடன் நெருக்கமானவர் ஒருவர் கூறியது ஞாபகத்தில உள்ளது. ஒரு பெரும் காரியத்தைச் சாதிப்பதற்கு சில முக்கியத்துவம் குறைந்த விடயங்களை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை. முன்னோக்கிச்செல்ல வாழ்த்துக்கள். சிரேஸ்ட அரசியல் வாதிகள் பலருக்கு இம்முறை அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் போனதற்கு முக்கியமான காரணம் அவர்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது பிரதேசத்திற்கோ மாத்திரம் சேவை செய்ய முற்பட்டது ஒரு புறம் இருக்க சிலர் எந்த முன்னேற்றத்தையும் காட்டத்தவறியவர்களுமாகும். அந்தத் தவறு உங்கள் பக்கம் நிகழாது என நம்மபுகிறோம்.

    ReplyDelete
  2. ..Why can't you all go with WHO ???

    First of all MR. Shabry Go and do something to STOP Cremations of the Muslims Dead Body...

    ReplyDelete
  3. There are 2 Muslim Professionals, a Doctor and a Lawyer, who have been Victimized and Persecuted in Broad Day light by the Authorities. It is more than One Year since Dr. Shaffi was Falsely Accused and incarcerated in Remand Custody for a few months. Though he has been released from Remand Custody, he is yet to be Cleared of the Cooked up Charges and Still cannot Practice his Profession.
    The Lawyer, Mr. Hisbollah was arrested More than 4 months back, in April last, but, he is yet to be produced before the Courts.
    These are Two Clear cut cases of Abuse of the Legal System and Denial of Human Rights. As Justice Minister, will Mr. Sabry take quick action to Ensure Justice is quickly meted out to these two young Professionals so that they can return to Normal lives and pursue their Professions and also bring to an end the Enormous Suffering of their Families? Will he also ensure that those who were involved in Framing Dr. Shaffi with Blatant Lies, both within the Legal System and outside, are also brought to Justice?

    ReplyDelete

Powered by Blogger.