ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை விவகாரம் எனது கரிசனைக்குரிய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சி சமீபத்தில் 240,000 வாக்குகளை பெற்றது என குறிப்பிட்டுள்ள அவர் இதுவரையில் ஐக்கியதேசிய கட்சியின் 230,000 உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்துகொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும்,போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கப்பூர் கொண்டுவந்த சட்டங்களை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 கருத்துரைகள்:
Great Worlds. All The Best.
Great Words. All The Best...
Post a comment