Header Ads



சந்திரிக்கா, மகிந்தவை எப்படி கவனித்தாரோ, அதுபோல் தற்போது நடந்துள்ளது - நான் குழப்பமடைய மாட்டேன்


கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை பாதுகாத்து முன்நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று -17- கடமைகளை பொறுபேற்று கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய அனைவரும் இணைந்து கூட்டணியாக செயற்பட்டோம்.

அரசாங்கத்தை தெரிவு செய்யவும் இத்தனை செயற்பாடுகளை முன்னெடுத்தோம். எவ்வாறாயினும் கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேறு இடத்திற்கு சம்பந்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளம் பாதுகாக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக இருக்கின்றது.

14 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து கொள்ள பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டது.

கூட்டணிக்குள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது. கிடைத்துள்ள அமைச்சு சம்பந்தமாக திருப்தியுடன் செயற்படுவேன். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகும் தேவையில்லை.

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்சவை எப்படி கவனித்தாரோ அதுபோல் தற்போது நடந்துள்ளது.

நான் குழப்பமடைய மாட்டேன். சவாலை ஏற்றுக்கொள்வேன் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.