Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தை, திறக்க நடவடிக்கை - குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம் அனுமதி


தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக Daily Mirror ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தவிர்த்து கொரோனா அச்சுறுத்தல் இல்லாத நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் திகதி குறித்து இன்னமும் அரசாங்கம் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது மற்றும் எந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பது என்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

2 comments:

  1. DEAR JM.COM EDITOR,

    please send our message to respected authorities as srilankan we are working abroad send money to home country. we are the first citizen should be allowed to ENTER the home country not a foreign tourist.

    THIS is the voice of all the srilankan who is working in abroad planing vacation to see their love ones in home country with self quarantine at home like INDIA. OTHERWISE FOR one month vacation we need 75 to 90 days vacation.

    THIS IS MY KIND REQUEST TO JAFFNA MUSLIM EDITOR

    ReplyDelete
  2. நாட்டு மக்கள் மத்திய கிழக்கில் படும் அவஸ்த்தைகள் விளக்கம் மாதிரி இல்ல.ஆனா உல்லாச பயணிகளை கவனம் எடுக்கிறார்கள். என்னவொரு பித்தலாட்டம். இந்த நிலையிலும் விசேட விமாங என்று வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்களின் சுமார் 2 இலட்சம் வாங்கியே அரசு நாட்டுக்கு அழைத்து வருகிறது. திண்ண வழியின்றி தவிக்கும் மக்கள் இவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?

    ReplyDelete

Powered by Blogger.