Header Ads



முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பை ஊக்குவிக்குக - சிவில் சமூக நிறுவனங்கள் வேண்டுகோள்


எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அவ்வப்பிரதேச சிவில் சமூக நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம், ஹஜ் பெருநாள் காலம் மற்றும் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்திருக்கலாம் என கருதுவதாலேயே இவ்வாறு பொது மக்களை ஊக்குவிக்குமாறு சிவில் அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் குறைவடையலாம் என தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதன்காரணமாக தமிழ், முஸ்லிம் பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு ஊக்குவிக்குமாறு அவர் ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தல் ஆணைக்குழு தலைவரின் மேற்படி வேண்டுகோளைச் சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள், எதிர்வரும் தேர்தல் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சகல முஸ்லிம்களையும் தவறாது வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.  – Vidivelli

No comments

Powered by Blogger.