Header Ads



அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் கண்டனம், இஸ்லாமியப் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்களை இந்துத்துவாதிகளிடமிருந்து காப்பாற்றவும் கோரிக்கை


ஐந்து நூற்றாண்டுகளாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு மீண்டும் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தளங்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

1992ஆம் ஆண்டு பாஜக மற்றும் அதன் தீவிர இந்துத்துவ கூட்டணிக் கட்சிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த வலிமிகுந்த காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் மனதில் பழைமை மாறாமல் உள்ளது.

கொரோனா தொற்று பரவும் இந்த சூழலிலும் ராமர் கோயிலின் கட்டுமானம் தொடங்கப்பட்டது, முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, அச்சுறுத்தலான தேசிய குடிமக்கள் பதிவேடு, டெல்லியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடைபெற்ற தாக்குதல் மற்றும் பிற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு, அச்சத்திலும், ஒடுக்கப்பட்டும், வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டு வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜக சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தளங்களைத் தாக்கி வருகின்றன.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்களை `இந்துத்துவா` அமைப்புகளிடமிருந்து காப்பாற்ற சர்வதேச நாடுகள், ஐநா., மற்றும் தொடர்புடைய அனைத்து சர்வதேச அமைப்புகள் உதவிபுரிய வேண்டும்.

1 comment:

  1. எந்த நாய்களின் பூச்சாண்டித்தனத்திற்கும் முஸ்லிம்கள் பயந்தவரகள் அல்லர். எங்கள் நம்பிக்கை அந்த அல்லாஹ்வின் மீதே. அபூதாலிப் அவரகள் எந்த நம்பிக்கையில் அப்ரஹாவிடம் இருந்து காபா (Khafha) வைக் காப்பாற்ற முன்வரவில்லையோ அதே காரணத்திற்காக நாங்களும்' வாளாவிருப்போம். மஸ்ஜித்கள் அனைத்தும் அல்லாஹ்வின் சொத்து. அதனை அவன் காப்பாற்றட்டும். காப்பாற்றுவான். அதிசயங்கள் நிகழும். நாம் பார்வையாளர்களாக மாத்திரம் இருப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.