Header Ads



கொழும்பு வாழ் முஸ்லிம், பெண் ஒருவரின் அவலக் கதை


(அஸ்ரப் ஏ சமத்)

கொழும்பு வாழ் ஓர் முஸ்லிம் பெண்  ஒருவளின் அவலக் கதை  எனது வீடமைப்பு அலுவலகத்தில் வந்து அவள் தெரிவித்த சம்பவம் எங்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை ஆளும் கட்சியில் இருந்து ஓர் சிபாா்சுக் கடிதமொன்றைப் பெற்றுக் கொள்ள கொழும்பில் யாருமில்லை. நான் தெமட்டக் கொடையில் 15 வருங்களாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீட்டுடன் காணியும்   இலட்சக் கணக்கில் விலைகொடுத்து வாங்கினேன். அதற்கு காணிப் பத்திரம் இல்லை அந்தக் காலத்தில் பிரேமதாசாவினால் வழங்கப்பட்ட வீட்டுக்குரிய காட் மட்டுமே இருந்தது. அதை வைத்தே பவா்ஒப் அட்டோனி எழுதி இச் சொத்தினை வாங்கினேன.

 சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருக்கும் காலத்தில் அவருடைய ஆதரவாளா் என ஒருத்தா் வந்து எனது மேலதிகமாக உள்ள 2 போ்ச் காணியை தான் வாங்கியதாகச் வந்து சொன்னாா். அதில் வீடு தவிா்ந்த மேலதிகமாக 2 போ்ச் அரச காணி என்றாா் அடிக்கடி எனது வீட்டுக்குள் வந்து வீடு கட்டப்போகிறேன்  எனக் கஸ்டப் படுத்தினாா் . கொழும்பு நாரேகேன்பிட்டியவில் உள்ள . வீடமைப்பு  அதிகார சபையின் ஊழியா்கள்  வந்து 2 பேர்ச் காணி மேலதிகமாக உள்ளது. அதனை நீா்  சட்ட விரோதமாகப் பிடித்துள்ளதாக வந்து சொல்லி எல்லைகளுக்கு குற்றிகள் நாற்றி விட்டுப் போனாா்கள்.. அந்தக் காணியையும் சோ்த்துதான் நான் பெரேரா என்பவரிடம் 15 வருடங்களுக்கு முன் வாங்கினேன். . இந்த அரசு வந்த   பின் விமல் வீரசன்ச அமைச்சரின் ஆதரவாளா் என வேறு ஒருவா் இக் காணியை எடுத்துள்ளதாக வந்து சொல்கிறாா். இதற்கு நான் என்ன செய்கின்றது தெரியவில்லை.  எனக்கு துாக்கமும் நிம்மதியும் இல்லை. கணவருக்கும் சரியான கவலை அவர் வெளிநாட்டுக்குச் சென்றுதான் சிறுகச் சிறுக பணம் சம்பாதித்து இவ் வீடு காணியை வாங்கினோம். . எனக்கு அந்தக் காணி வேண்டும். 4 பெண் குழந்தைகள் உள்ளனா். அவா்களுக்கு எல்லோறுக்கும் இதற்குள்ளே வீடு கட்டிக் கொள்ள வேண்டும்.  கணவா் முச்சக்கர வண்டி ஓட்டி அதில் வரும் வருமானத்தை வைத்தே நாங்கள் காலத்தைக் கடத்துகின்றோம் . இந்தக் காணிக்கு ஒரு சிறு தொகையை மதிப்பீட்டு  வீடமைப்பு அதிகார சபையினால் தருவாா்களேயானால் அதனை நான் செலுத்த முடியும். எனது தங்க நகைகளையாவது விற்று அக் காணியை நான் சொந்தமாக்கிக் கொள்வேன் என்றாள் அந்த முஸ்லிம் பெண். 


இவ் விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட வீடமைப்பு  முகாமையாளரிடம் நான் கதைத்தபோது அவள் சொல்கின்றாள் அவங்க முஜிபு ரகுமானிடம் முந்தி கடிதம் கொண்டு வந்தவர்கள். இப்ப அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுப் பெருமுன ஆட்சி, டெலிபோன் கட்சிக் காரருக்கு எப்படி இந்தக் காணியை நான் கொடுப்பது என்கிறாள் அந்த முகாமையாளா் - அந்த முகாமையாளரோ ஒரு பெண் பாதுகாப்புத் தொழில் இருந்தவளை  நல்லாட்சி  இருந்த காலத்தில் அதிகார சபையின் ஜ.தே.கட்சி தொழில் சங்கம்  அவளை முகாமையாளராக  ஆக்கினாா்கள் அவளை வைத்து அரச சொத்துக்கள் மிச்சம் மிகுதி காணி வீடுகள்  கடைகளை வைத்து பணம் வாங்கினாா்கள்.. இப்பொழுது அவள் மாறிச் சொல்கின்றாள் இப்பொழுது உள்ள  அரசாங்கம்  ஸ்ரீலங்கா பொதுப் பெருமுனை எமது அமைச்சா் மகிந்த ராஜபக்ச, அதிகார சபையின் தலைவா் -ஸ்ரீலங்கா பொதுப் பெருமுனை கட்சியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளவா் எவ்வாறு முஜிபு ரகுமான் ஆதரவாளா்க்கு அநவசர மேலதிகமாக பிடித்த சட்டவிரோத 2 போ்ச் காணியை இந்த பெண்னுக்கு வழங்குவது ? என என்னிடம் கேட்கிறாள் அந்த முகாமையாளா் 


நான் கூறினேன் இதில் அரசியல் இல்லை 15 வருடங்கள் அவள் வாழ்ந்து வந்தவருக்கே அந்தக் காணி சொந்தம். அவ்வாறு சிபாா்சு கடிதம் தேவையென்றாள் அமைச்சா் அலி சப்றி ஊடக கடிதம் வாங்கி கொண்டு வந்து உரிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் ஊடாக அதனை அவா் சமா்ப்பிப்பாா். நீ கவனமாக இரு, முகாமையாளா் கதிரையில் இருந்து கொண்டு - கடந்த 5 வருடத்தில் அரசாங்கத்தில் நீங்கள் பொதுமக்களிடம் பெற்ற பணம் வாங்கிய பல சம்பவங்கள் எல்லாம் உரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள்  முறையிட்டுள்ளனா். இந்தப் பெண்னிடமே நீர் 5 இலட்சம்  ஏற்கனவே கேட்டுள்ளீா் அந்தக் காணியை உனக்கு சரி பன்னித் தருவேன் என்று இலஞ்சம் கேட்டுள்ளாய் இவை பற்றி அப் பெண் ஜனாதிபதிக்கும் இலஞ்ச ஆனைக்குழுவுக்கும் உரிய ஆதாரத்துடன் முறையிட்டுள்ளாா் எனக் கூறினேன். தற்பொழுது அந்த பெண் முகாமையாளா் பதவியில் இருந்து அகற்றி தலைமைக்காரியாலயத்தில் பதவி இல்லாமல் உள்ளாா். அவள் என்னை அலுவலகத்தில் கானும்போதெல்லாம் அவள் செய்த குற்ற உணா்ச்சிகள் அவளை வாட்டி வதைக்கின்றது.   


1 comment:

  1. காலமெல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வந்த கொழும்பு முஸ்லிம்களுக்கு அந்த கட்சி வறுமையை தான் பரிசாக வழங்கியுள்ளது .இனிமேலாவது கொழும்பு முஸ்லிம்கள் விழித்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.