August 28, 2020

முஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..!


22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம் காட்டி தகனம் செய்யப்பட்டது. 

Covid-19 தொற்றுதலுக்கு உள்ளாகி இருக்கும் போது மறணம் அடைந்த (Covid-19காரணமாகவோ அல்லது வேறு எதுவும் காரணமாகவோ) அனைத்து உடல்களையும் எரிப்பதாக  இலங்கை அரசாங்கத்தினால் ஏப்ரல் மாதம் ஆரம்பப் பகுதியில் அறிவித்தல் விடுக்கப் பட்டிருந்தது. இரண்டாவதாக மறணத்தைத் தழுவிய முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சகோதரர் Rauff Hakeem அவர்கள் அதற்கு எதிரான நியாயங்களையும் கண்டனத்தையும் முகநூல் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார். மூன்றாவது Covid-19 மறணமும் முஸ்லிமாக இருந்தது, அதை எரிப்பதில் இருந்து தடுப்பதற்காக அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அந்த பேச்சு வார்த்தை வெற்றி அளிக்கவில்லை. அரசாங்க தரப்பில் கூறப்பட்ட காரணம் இறந்த உடலை அடக்கம் செய்யும் போது அங்குள்ள சுழல் மாசடையலாம் அதன் மூலம் அதைச் சுற்றியுள்ளவர்கள் Covid-19 தொற்றுகைக்கு உள்ளாகலாம். உலக நாடுகள் அனைத்தும் அடக்குவதற்கான சம்மதத்தை வழங்கியும் இலங்கை அரசு அதை தடை செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சகோதரி  Rifana வின் மறணம் ஏற்பட்டது உலகில் Corona தொற்று ஏற்பட்டு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு, உலகில் எல்லா இடங்களிலும் வேகமாக பரவத் தொடங்கி 6 மாதங்களாகின்றன. இலங்கையில் முதலாவது இலங்கையர் தொற்றுக்குள்ளானதை உறுதிப்படுத்திய நாள் 11 March 2020.

முதலாவது Covid-19 case இலங்கையில் report பண்ணுப்பட்டது 27 ஜனவரி 2020, China வைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்மணி.

ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் விடாப்பிடியாக இருந்ததற்கு காரணம் அடக்கும் போது மற்றவர்களுக்கு தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகம், அவ்வாறுதான் அவர்களுடைய கருத்தை நியாயப் படுத்தினார்கள் ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 8 மாதங்கள் இலங்கை தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் அடக்கம் செய்கிறார்கள். இதுவரையில் எந்த நாடும் அடக்கம் செய்வதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்று கூறவும் இல்லை, அதைத் தடைசெய்யவும் இல்லை. 

Rifana வின் மறணசெய்தி கேட்டவுடன் இன்று இருக்கின்ற 19 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு முறை புதிய அரசாங்கத்தோடு பேசி இருக்கலாம். அதன் போது மேற்கூறிய காரணங்களை ஆதாரமாகக் கூறியிருக்கலாம். Medical Field இல் உள்ள சிலரையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு போயிருக்கலாம். அவ்வாறு பேசியிருந்தால் சிலவேளை அரசாங்கம் அவர்களினுடைய ஆரம்ப முடிவை மாற்றி இருக்கலாம்.

8 மாதங்களாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அடக்கம் செய்கின்ற பட்சத்தில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி நமது அரசாங்கம் மறுக்கின்ற போது நமது பக்கம் உள்ள நியாயங்களை இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களிடமும் கூறி இருக்க முடியும் அதேபோன்று சர்வதேசத்திடமும் கூறி இருக்க முடியும் ஆனால் எதுவும் நடைபெறவில்லை காரணம் தேர்தல் முடிந்து விட்டது இன்னும் ஒரு தேர்தல் வரும் போது பார்ப்போம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை.

இன்று நமது அரசியல் வாதிகள் பேசவேண்டிய இடங்களில் பேசாமல் தேவையற்ற இடங்களில் பேசி காலத்தைக் கழிக்கிறார்கள் அதற்கு நமது சகோதர சகோதரிகளும் பாராட்டுகிறார்கள்.

அன்று ஒன்றன் பின் ஒன்றாக 3 மையத்துக்கள் எரிக்கப்பட்டன, நீண்ட இடைவேளைக்கு பிறகு Rifana  வின் உடல் எரிக்கப்பட்டன, நாளை யாராகவும் இருக்கலாம், இறைவன் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

சில சமூக அமைப்புகள் 05 / 08 / 2020 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தற்போது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வரவேற்பு அளித்தார்கள் ஆனால் அவர்களும் மீண்டும் ஒரு முறை இந்த 19 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து அரசாங்கத்தோடு பேச வைப்பதற்கு முன் வரவில்லை. 

எதிர் வருகின்ற மாகாண சபை தேர்தலில் இந்த எரிப்பை மீண்டும் சந்தைப் படுத்துவார்கள், அதன் பிறகு மறந்து விடுவார்கள்.

மக்கள் சிந்திக்காதவரை அரசியல் வாதிகள் ??????????

Dr. Anpudeen Yoonus Lebbe

5 கருத்துரைகள்:

I fully support the article.. YES we should not leave or forget this human right violation in this country. While whole world is giving permission for burial, only current Srilankan government keeps adamant in its decision.

Our leaders should continue to strive for this right.. So that they will one day change their wrong decision or the world will realize the human right violation in this government toward minority.

இதற்காக இன்னொரு மரணம் வரையோ அல்லது மாகாண சபை தேர்தல் வரையோ காத்திருக்கத் தேவையில்லை.  இப்போதே, அடுத்த சபை நடக்கும் நாளிலேயே, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி ஒருமித்து Dr. Anpudeen Yoonus Lebbe இங்கு விளக்கியுள்ள விபரங்களை உட்படுத்தி முயற்சிக்கலாம்.  இதற்கு, இதனைப் படிக்கும் ஓவ்வொருவரும் தத்தம் பாராளுமன்ற அங்கத்தவர்களை இது விடயம் நடக்க ஞாபகப்படுத்தி உற்சாகப்படுத்தினால் போதும் என்று நினைக்கிறேன்.  இதனை அனைவரும் தவறாமல் செய்வோமாக.

Dr.அவர்களின் கருத்தை ஏற்று அதன்படி செயல் பட எத்தனை முஸ்லிம் எம்பி மார்கள் முன்வருவார்கள் என சமூகம் பார்த்துக்கொண்டிருக்கன்றது.ஒற்றுமைபட்டால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமது எம் பிமாருக்கு இருக்கிறதோ தெரியவில்லை.


தற்போதைய எங்களுடைய பா உ க்களுக்கு மிகவும் அதிகமான வேலைப்பழுவின் (என்ன "வேலைப்பழு" என்று மாத்திரம் கேட்டுவிட வேண்டாம்) காரணமாக Covid19 க்கு எல்லாம் அதிமுக்கியத்துவம் கொடுக்கின்றார்களா இல்லையோ என்பது தெரியாது. எதிர்காலத்தில் தேர்தல்கள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி எங்கள் தலைவரகளுக்கு இந்த Covid19 அதிமுக்கிய பிரச்சினை அல்ல. எங்களுடைய மக்களும் அவரகள் சொல்வதைத்தானே கேட்கின்றார்கள்.

எல்லாவற்றையும் இலகுவாக முறியடிக்க அரசுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அலி சப்ரிதான் . அவரை வைத்தே எமக்கு எதிரான அனைத்து காய்நகர்த்தலையும் செய்வார்கள் .

Post a comment