Header Ads



ரணிலுக்கே தேசியப்பட்டியல் ஆசனம், கிடைக்க வேண்டும்: சஜித் அணி ஆதரவு


(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிறுகுழுவினரின் தலைமத்துவ பதவியின் மீதான மோகத்தின் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியினால் மக்கள் ஆணையுடன் ஒரு ஆசனத்தை கூட வெற்றிக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நளின்பண்டார, ஐ.தே.க.விற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியலில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் பெயரே பரிந்துறைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தாம் அதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது. அதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக் கூறவேண்டும். கட்சியை பிளவுப்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மேலும் ஐந்து ஆசனங்களை எம்மால் வெற்றிக் கொண்டிருக்க முடியும். ஆனால் , ஐ.தே.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்றும் மோகத்தில் இருக்கும் சிறுகுழுவினரால் நாங்கள் தனித்து போட்டியிட வேண்டி ஏற்பட்டது. இறுதியில் ஐ.தே.க.வினால் மக்கள் ஆணையுடன் ஒரு ஆசனங்களையாவது வெற்றிக் கொள்ள முடிந்ததா? தேசியப் பட்டியலில் கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்திற்கும் ஒருவரை கூட பெயரிடமுடியாமல் இருக்கின்றனர்.

ஐ.தே.க.வின் உண்மையான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடனே இணைந்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சி ஆதரவாளர்கள் பலர் என்ன செய்வது என்று அறியாது வாக்களிப்பை புறக்கணித்து உள்ளார்கள். எதிர்வரும் தேர்தல்களின் போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்புகளை சஜித் பிரேமதாசவிற்கு ஒப்படைக்க வேண்டும்.  தற்போது ஐ.தே.க.வில் எஞ்சியிருக்கும் கட்சியின் பொதுச் செய்லாளர் அக்கிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட எவருக்கும் எதிர்வரும் மாகாணசபை தேர்தல் அல்லது உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களால் வெற்றிப் பெற முடியாது. அவர்களால் முடியும் என்றார் இந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியிட்டு காட்டுமாறு அவர்களுக்கு சவால் விடுகின்றேன்.

நானும் ஐ.தே.க.வின் சார்பில் போட்டியிட தீர் மானித்திருந்தால் , இன்று அவர்களின் நிலைமையே எனக்கும் ஏற்பட்டிருக்கும். எனக்கு கிடைத்த இந்த வாக்குகள் நளின் பண்டார என்ற நபருக்காக கிடைக்கப் பெற்றது அல்ல , ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளாகும். அதனால் , நாங்கள் தொடர்ந்தும் எமது கட்சியை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவோம். ஐ.தே.க.வின் தலைமைத்துவ பொறுப்பை சஜித் பிரேமதாசவுக்கு ஒப்படைக்க இவர்கள் முன்வந்தால் அக்கட்சிக்குள் எஞ்சியிருக்கும் நபர்களில் சிறந்தவர்களை இணைந்துக் கொண்டு எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்போம். ரணில் விக்கிரமசிங்கவை போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவேண்டும். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அவரின் முயற்சியின் காரணமாகவே இன்று பாராளுமன்றத்தில் ஜனநாயக கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் இடைவெளியை வேறு எவறாளும் நிவர்த்தி செய்யமுடியாது.

1 comment:

  1. இந்த ரெண்டு பேருக்கும் முதுகெலும்பில்லை this is true but i not invold any political parties.

    ReplyDelete

Powered by Blogger.