Header Ads



புத்தசாசன அமைச்சை ஜனாதிபதி வகிக்க வேண்டும் என அறிவிக்குமாறு கோரி மனு தாக்கல்


புத்தசாசன அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிக்க வேண்டும் என அறிவித்து உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன, உயர் நீதிமன்றத்தில் இன்று (17) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தற்போது ஜனாதிபதியிடம் காணப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வேறொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்க தயாரிகியுள்ளமை குறித்து தமக்கு அறிய கிடைத்துள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்யுமிடத்து அந்த செயற்பாடும் புத்தசாசன அமைச்சும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கையளிப்பது அரசியல் அமைப்பை மீறுவதாக அமையும் என உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏதேனும் ஒரு மாவட்டத்தின் வாக்காளர்களால் அல்லது தேசிபை் பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபராக அன்றி முழு நாட்டு மக்களின் நேரடி வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதால், பாதுகாப்பு மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிப்பது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஏற்புடையது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், அரசியல் அமைப்பின் 09, 10 மற்றும் 12 ஆம் சரத்தின் முதலாம் பிரிவு ஆகியவற்றில் பாதுகாக்கப்படும் உரிமைகள் மீறப்படும் எனவும் அல்லது அவற்றை மீற முயற்சிக்கப்படுவதாக கருதப்படும் எனவும் சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன தனது மனுவில் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 30 ஆவது சரத்திற்கு அமைய ஜனாதிபதியானவர் அரசாங்கத்தின் தலைவராகவும் நிறைவேற்றதிகாரத்தின் தலைமையை வகிப்பதாலும் அரசியலமைப்பின் 09 ஆவது சரத்திற்கு அமைய, புத்த மதத்திற்கான முன்னுரிமையை பேணுதல் என்ற விடயத்தில் ஜனாதிபதி அடிப்படை குற்றம் இழைப்பதாக மனுதாரர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதியாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.