August 11, 2020

என் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் சலிப்பு தட்டுகிறது, சீக்கிரம் விடைபெற தோன்றுகிறது


<தேசிய பட்டியலும், நானும்>

ஒரு கட்சி அமைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, உயிர் அபாயங்களுக்கு முகங்கொடுத்து, சக தலைமை நண்பர்களுடன் இணைந்து, எமது அந்த அரசியல் இயந்திரத்தை, பல மாவட்டங்களுக்கு கூட்டணியாக வியாபித்து, தேசிய கூட்டணியின் பெரும்பான்மை தலைவர்களுடன் நட்புடன் வாதாடி, நியமனங்களை பெற்று, சொந்த சொத்துகளை விற்று, பல கோடி ரூபா தேர்தல் நிதியை கொட்டி, பற்பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களை தொடர்ச்சியாக செய்து, மக்களை வீடு வீடாக போய் சந்தித்து, வாக்காளர்களாக இருந்தும், தேர்தல்களில் எதிர்பார்த்த அளவு வாக்கை அளிக்காமல் சும்மாவே வீட்டில் படம் பார்த்துக்கொண்டு இருந்த வாக்காள மக்களால் மனம் நொந்து, தேர்தலுக்கு பிறகு, தேசிய பட்டியல் தொடர்பில், அதே தேசிய கூட்டணி பெரும்பான்மை தலைமையுடன் முரண்பட்டு, வாதாடி கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, ஒரு சமூக ஊடக பதிவுகூட போடாத, எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, அதையும் மீறி சென்று, பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, பாமரரில் இருந்து சுயாதீன மீடியாகாரர்கள் வரை, பலர் இன்று வலிக்காமல், “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் கூக்குரலிடுவதை பார்க்கும் போது, நமது மக்களில் இத்தனை நிறங்களா? என்றும், எமக்கு வேண்டிய வேளைகளில் இந்த “போராளிகள்” எங்கே போனார்கள்? என்று உரக்க கத்தி கேட்க தோன்றுகிறது.

(என் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் முழுக்க சலிப்பு தட்டுகிறது..! அட சே, சீக்கிரம் விடை பெற்று செல்ல தோன்றுகிறது...)


Mano Ganesan Mp

3 கருத்துரைகள்:

Its a true feeling...!

உலகில் உள்ள மிகவும் கேவலமான தொழில் அரசியல்தான். மாடுமேய்ப்பவன் பிரபல சட்டத்தரணிக்கு சக்கிலியன் என்று சொல்லுவான் பொறுத்துக்ககொண்டு வாக்குக்கேட்க வேண்டும். ரோசம் மானம் இல்லாதவன், பிழைப்புக்குவேறு வழி தெரியாதவன், எதை விற்றாவது ஒரு பிடி கௌரவத்தைப் பெற விரும்புவோருக்கான தொழில். கூட உலவிக்கொண்டே கழுத்தறுப்புச் செய்யும் தொழில் அதனைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்ககொள்ள வேண்டும். அரசியலுக்கு கல்லான அல்லது பண்பட்ட உள்ளம் வேண்டும். நான் நினைப்பதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு தொழிலுக்கும் சரி வர மாட்டார்கள்.

ஜனநாயகத்திற்காகப் போராடும் வீரர்களுக்கு சலிப்பே ஏற்படக்கூடாது. எவரும் பணத்தையும் சக்தியையும் அள்ளி வீசுவார்கள். ஏனெனில் இவை இரண்டும் அவரகளுடையது அல்ல. ஆனால் ஜனநாயக நாட்டில் உண்மை ஜனநாயகவாதியான வாக்காளன் தனக்கே சொந்தமான வாக்கினை மட்டும் "சும்மா" அள்ளி வீசமாட்டான். தனது வாக்கினைப் பெறக்கூடிய தகுதி அந்த கோரிக்கையாளருக்கு உண்டா என்றுதான் அவன் முதலில் யோசிப்பான். என்னைப் பொருத்தவரை நீங்கள் உண்மையான ஜனநாயகவாதி. வாக்குகளைப் பெற்; கோர முழுத் தகுதியும் உங்களுக்கு உண்டு ஐயா. எனது கஷ்ட காலம். நான் உங்களுடைய தேர்தல் மாவட்டத்தைச் சேரந்தவன் அல்ல.

Post a comment