Header Ads



வஜிர அபேவர்தன ஒரு விஷக்கிருமி - கட்சிக்குள் கடும் எதிர்ப்பு


வஜிர அபேவர்தன என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கும் விஷக்கிருமி எனக்கூறி அந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கட்சிக்குள் நடக்கும் முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போது ஏனையோர் கருத்துக்களை முன்வைக்க இடமளிக்காது நடுவில் புகுந்து கருத்து வெளியிடும் நபராகவும், ஏனைய தலைவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது செயற்படும் நபராக மாத்திரமல்ல கட்சியின் தகவல்களை கசியவிடும் நபர் எனவும் வஜிர அபேவர்தனவுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நேரத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித மறுசீரமைப்பும் தேவையில்லை எனக் கூறியதை அடுத்து அவருக்கு எதிரான எதிர்ப்புகள் உச்சமடைந்துள்ளன.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மற்றும் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக கட்சியின் காலி மாவட்ட அதிகார சபையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள நிலைமையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வஜிர அபேவர்தனவுக்கு எதிரான எதிர்ப்புகள் கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தவறான தகவல்களை வழங்கி, தவறான முடிவுகளை எடுக்க தூண்டிய நபர் எனவும், ராஜபக்சவினருடனான உடன்பாட்டை கட்சிக்குள் நிறைவேற்றும் நபர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி முன்வரிசை தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.