Header Ads



ருஷ்தி ஹபீபுக்கு வாக்களித்து அவரை பாராளுமன்றம், அனுப்புமாறு இரத்தினபுரி மக்களுக்கு வேண்டுகோள்

- எம்.எல்.எஸ்.முஹம்மத் -

எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான சகல பிரச்சார  நடவடிக்கைகளும்  இன்று(2) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் இதுவரை காலாமாக தனது தேர்தல் ஆதரவு தொடர்பில் மௌனம் காத்து வந்த முன்னாள் சபரகமுவ மாகாண சபையின் இரத்தினபுரி மாவட்ட ஜக்கிய தேதியக் கட்சி உறுப்பினர் அல்ஹாஜ் இப்லார் எம்.யஹ்யா இரத்தினபுரி மாவட்ட சிறுபான்மையின தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஜக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய முன்வருமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு  தசாப்தங்களுக்கும் மேலாக ஜக்கிய தேசியக் கட்சி சார்பாக இரத்தினபுரி மாவட்ட உறுப்பிராக செயற்பட்டு வந்த மேற்படி அல்ஹாஜ் இப்லார் எம்.யஹ்யா இம்முறை எந்தவொரு அரசியல் தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் மிக நீண்ட  நாட்களாக அமைதி காத்து வந்த நிலையிலே இன்று(2) காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றினைத் தொடர்ந்து  ஜக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ருஷ்தி ஹபீபுக்கு ஆதரவளிக்குமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் இங்கு கருத்து  தெரிவிக்கையில் 

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இரத்தினபுரி மாவட்ட சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி  முன்னாள் அமைச்சர் அமரர் அபுசாலி அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.

அவரின் அந்த வெற்றிடத்தை இம்முறை சிறுபான்மை மக்களாகிய நாம் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்  செய்வதன் மூலம் எமது தேவைகளை நிறைவு செய்து கொள்வோம்.

அதிக வாக்குகளுடன் நிறைவான வெற்றி  அவருக்கு காத்திருக்கிறது. இம்முறை அவர் வெற்றி பெறுவதற்கு மிகக் கூடுதலான வாய்ப்புகள் உள்ளன.

எனவே இரத்தினபுரி மாவட்ட  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து  வேட்பாளர் ருஷ்தி ஹபீபின் வெற்றியை உறுதிப்படுத்துவது மிகப்பெரிய சமூகக் கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முக்கிய சந்திப்பில் வேட்பாளர் சட்டத்தரணி  ருஷ்தி ஹபீபின் இரத்தினபுரி ஆதரவாளர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டக் கிளையின் செயலாளர்  அஷ்ஷெய்ஹ் றிபா ஹஸன் உட்பட   இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.