Header Ads



ஐக்கிய தேசிய கட்சியுடன், இணைந்து செயற்பட தயார் - ஹரீன்


ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஐக்கியதேசிய கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் தேர்தல்களில் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படதயார் என ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஹரீன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தோல்வியை கொண்டாடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியில் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்களே உள்ளனர், அவர்களுக்கு தங்கள் பழைய கட்சி மீது பாசம் உள்ளது என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இணைந்து செயற்படுவதற்கு இதுவே சிறந்த தருணம் என குறிப்பிட்டுள்ள அவர், ஐக்கியதேசிய கட்சிக்கு இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் சில பதவிகளுக்கு தங்களுடைய உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் என நினைத்தால், மக்கள் ஐக்கியதேசிய கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இப்பொழுது எமது நாட்டிற்கு மிகவும் அவசரமாகத் தேவைப்படுவது ஜனநாயக விழுமியஙகளுடன்கூடிய ஆட்சிக் கட்டமைப்பு. இரணடு பிரதான கட்சிகள் இருக்கின்றன. பல துணைக்கட்சிகளும் இருக்கின்றன. இந்நாடு பலதரப்பட்ட மக்களை உடையது. ஊழல்கள் ஒழிக்கப்பட்டு பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்படுமானால் சிறந்த ஆட்சி எவ்வித தங்குதடையும் இல்லாமல் நடைபெறும். பல அரசியல்வாதிகள் மக்கள் சேவையை தொழிலாக எண்ணிச் செய்வதனாலேயே "இலங்கை ஜனநாயகம்" மதிப்பிழந்ததற்கான காரணமாகும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் இணையலாம். அல்லது இணையாமல் விடலாம். தற்போது அதுவல்ல பிரச்சினை. நாட்டு மக்கள் இன சௌஜன்னியத்தைப் பேணி தமது வாழ்க்கை முறைமையை அமைத்துக் கொள்ளல் வேண்டும். பொருளாதாரம் அபிவிருத்தி அடைதல் வேண்டும். மக்கள் மத்தியில் ஐயப்பாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தம் வாழ்க்கை முறைமையினை நடாத்திச் செல்லும்போது நாட்டுக்குள் சௌஜன்னியம் தானாகவே வந்துவிடும். இவ் அடைவுகளை அடைய எமது அரசியல் கட்சிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்.
    What our country urgently needs now is a governance structure with democratic values. There are two main parties. There are many sub-parties. This country has a diverse population. If corruption is eradicated and the economy is developed, better governance will take place without any hindrance. The depreciation of "Sri Lankan democracy" is because many politicians regard public service as a profession. The United National Party and the United People's Power may unite in the future. Or maybe left unconnected. That is not the problem at present. The people of the country must maintain their way of life while maintaining ethnic harmony. The economy needs to thrive. Co-operation will automatically come into the country when people remove their doubts and understand each other and lead their way of life. What should be the role of our political parties and politicians in achieving these directories?

    ReplyDelete

Powered by Blogger.