Header Ads



நான் கொலைகாரன் இல்லை என, எங்கள் தலைகளில் தந்தை சத்தியம் செய்தார் - பிரேமலாலின் புதல்வி


(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான தனது தந்தை பிரரேமலால் ஜயசேகர கொலை குற்றச்சாட்டுக்கு உரித்தானவர் அல்ல என அவரது புதல்வியான செனாலி ஜயசேகரவின் தெரிவித்தார்.

முன்னாள் பிரதியமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளருமான பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட பின் நேற்று அவர் ஊடக ங்களுக்கு தகவல் தருகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில்,

 எனது தந்தை அவ்வாறானதொரு கொலை குற்றத்தை செய்யவில்லை. சம்பவ தினம் காவத்தை நகரில் இவ்வாறா னதொரு கொலைச்சம்பவம் நடை பெற்றுள்ளது என அறியக் கிடைத்தது. அன்றைய தினம் எனது தந்தை  எனது தாய் உட்பட என்னையும் என்னுடைய இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனையும் அழைத்து எங்களின் தலைகளில் கையை வைத்து தான் இவ்வாறான குற்றத்தை செய்யவில்லை என சத்தியம் செய்து உறுதிப்படுத்தினார்.

எனது தந்தையின் வார்த்தைகளில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது அவர் எப்போதும் எங்களுக்கு பொய் கூறியதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் தந்தை என்னுடன் உண ர்வு பூர்வமாக சில விடயங்களைக்க தைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றி பெறச்செ ய்வதற்காக தான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு என்னைப் பணித்தார். அதற்கிணங்க என்னுடைய கடமை பொறுப்புகளை என்னால் இயன்ற வரை செய்து வருகின்றேன்.

இவ்விடயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னுடன் உரையாடினார். தனது தந்தைக்கு இத்தேர்தலில் போட்டியிடுவதற் கு எந்த  விதமான சட்ட ரீதியான தடைகளும், இல்லையெனவும் பிரதமர் கூறினார். எனவும் செனாலி ஜயசேகர தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.