கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 300 பள்ளிவாசல்களின் பதவிக்காலம் முற்றுப்பெற்றும் புதிய நிர்வாகங்கள் தெரிவு செய்யப்படாதுள்ளன.
தற்போது கொரோனா வைரஸ் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் அவ்வாறான பள்ளிவாசல்கள் ஜமாஅத்தாரைக் கூட்டி ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
அதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால எல்லைக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறும் 300 பள்ளிவாசல்களுக்கெதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
- Vidivelli
0 கருத்துரைகள்:
Post a comment