Header Ads



ஏப்ரல் 30 க்கு பின் நாட்டிளுள் எந்த கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை - ஆனால் கொரோனா இல்லாத நாடாக பிரகடனப்படுத்த முடியாது


வெளிநாடுகளில் கொவிட் - 19 தொற்று பரவல் குறைந்து காணப்படினும் இலங்கையை கொவிட் தொற்று இல்லாத நாடாக பிரகடனப்படுத்த முடியாது என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிளுள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 


இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் காரணத்தால் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


நாட்டினுள் உள்ள இலங்கையர்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சிறிய தவறினால் கூட கொரோனா தொற்று பரவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


நாட்டு மக்களுக்கு நாடு கொரோனாவை தோற்கடித்து விட்டதாக நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும் இதனை உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் இது ஒரு வைரஸ் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Then what about Kandakadu cases

    ReplyDelete
  2. தொற்று இருக்கு ஆனா தொற்று இல்ல என்டு சொல்ல வாறாரு போல...

    ReplyDelete

Powered by Blogger.