Header Ads



28 அமைச்சுக்களும் 40 இராஜாங்க அமைச்சுக்களும் தயார் நிலையில் (முழு விபரம் இதோ)

புதிய அமைச்சரவை கட்டமைப்பில் 28 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் விடயதானங் கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப் பட்டுள்ளது.

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அமைச்சரவை அறிவிப்பில் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடக்கிய அமைச்சரவையை அதி விசேட வர்த்தமானியில் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பிலுள்ள அமைச்சுகளும் இதில் அடங்கும்.

அமைச்சுகளின் அமைப்பு, நோக்கம், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பு இன்று 10 ஆம் திகதி திங்கட் கிழமை மாலை  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமைச்சுகளைத் தயாரிப்பதில் தேசிய முன்னுரிமைகள், கொள்கை பொறுப்புகள் மற்றும் பாத்திரங்கள் கவனத் தில் கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைச்சின் பரந்த பங்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட முன்னுரிமைகள் மற்றும் பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு இலகுவான முறையில் இராஜாங்க அமைச்சு அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் கட்டமைப்பை வகுப்பதில் தேசியப் பாது காப்பு, பொருளாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  கிராமப்புறம் ,  விவசாய மேம்பாடு மற்றும் கல்வித் துறையின் பல அம்சங்களை உள்ளடக்கி யுள்ளது.

ஒவ்வொரு அமைச்சின் நோக்கம், குறிப்பிட்ட முன்னு ரிமைகள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட கட்டமைப்புகள் துணை தலைப்புகளின் கீழ் விளக்கப் பட்டுள்ளன.

அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் ஆகஸ்ட் 12 ஆம் திகதி புதன் கிழமை கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க  தலதாமாளிகை வளாகத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் ஜனாதிபதி முன் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.