Header Ads



26 புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் (முழு விபரம்) தமிழர், முஸ்லிம்கள் எவருமில்லை

நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 

1. அமைச்சரவை செயலாளர் - டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்ணான்டோ பிள்ளை

2. சுற்றுச்சூழல் அமைச்சு - வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க

3. வௌியுறவு அமைச்சு - அத்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொலம்பகே

4. நிதி அமைச்சு - எஸ்.ஆர்.ஆடிகல

5. பெருந்தெருக்கள் அமைச்சு - ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி 

6. அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு - ஜே.ஜே. ரத்னசிறி

7. வெகுஜன ஊடக அமைச்சு - ஜகத் பீ.விஜேவீர

8. பெருந்தோட்ட அமைச்சு - ரவிந்திர ஹேவாவிதாரண

9. நீர்பாசன அமைச்சு - அனுர திஸாநாயக்க

10. கைத்தொழில் அமைச்சு - டபிள்யு.ஏ.சுலானந்த பெரேரா 

11. மின்சக்தி அமைச்சு - வசந்த பெரேரா 

12. சுற்றுலா அமைச்சு - எஸ். ஹெட்டியாராச்சி

13. காணி அமைச்சு - ஆர்.ஏ.ஏ.கே. ரணவக

14. தொழில் அமைச்சு - என்.பீ.டி.யூ.கே. மாபா பதிரண 

15. கடற்றொழில் அமைச்சு - ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க

16. பாதுகாப்பு அமைச்சு - மேஜர் ஜெனரால் (ஓய்வு) கமல் குணரத்ன

17. வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு - எம்.கே.பீ ஹரிச்சந்திர

18. போக்குவரத்து அமைச்சு - என்.பீ.மொன்டி ரணதுங்க

19. நீர் வழங்கல் அமைச்சு - கலாநிதி பிரியத் பந்து விக்ரம

20. வர்த்தக அமைச்சு - ஜே.எம்.பீ. ஜயவர்தன

21. சுகாதார அமைச்சு- மேஜர் ஜெனரால் சஞ்சீவ முணசிங்க

22. கமத்தொழில் அமைச்சு - மேஜர் ஜெனரால் (ஓய்வு) ஏ.கே.சுமேத

23. இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு - அனுராத விஜேகோன்

24. வலுசக்தி அமைச்சு - கே.டீ.ஆர்.ஒல்கா 

25. கல்வி அமைச்சு - பேராசிரியர் கபில பெரேரா 

26. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு - சிறிநிமல் பெரேரா

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.