Header Ads



252 கொள்கலன்களில் ஈராக்கிற்கு அனுப்ப, திட்டமிடப்பட்டிருந்த கழிவு தேயிலை பிடிபட்டது


ஒருதொகை கழிவு தேயிலையை ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அந்த கொள்கலன், சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கருவாப்பட்டையை ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து, கடந்த 17 ஆம் திகதி கழிவு தேயிலையை கொள்கலன் மூலம் ஏற்றுமதி செய்ய திட்டமிடபட்டிருந்தாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அந்த கொள்கலனில் கழிவு தேயிலை இருப்பதாக எழுந்த சந்தேகத்தில், அதனை ஏற்றுமதி செய்ய முயற்சித்தவர்கள் சுங்க பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இதுவரை சுங்க பிரிவில் ஆஜராக தவறியுள்ள நிலையில், வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. 

இவ்வாறு கழிவு தேயிலை அடங்கிய 252 கொள்கலன்களை ஈராக்கிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தாக சுங்க முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த மோசடியுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.