Header Ads



2 முஸ்லீம் Mp க்கள், அரசாங்கத்துடன் இரகசிய பேச்சு

அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆரம்பித்துள்ளனர் என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர் என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுபான்மை கட்சியொன்றை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையிலும் முக்கிய எதிர்கட்சியிடமிருந்து

தேசியபட்டியல் ஆசனங்களை பெறுவதில் சிறுபான்மை கட்சிகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையிலும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளதை முக்கிய அரசியல்வாதியொருவர் உறுதிசெய்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் உள்ள நிலையில் அரசாங்கம் ஏன் சிறுபான்மை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுகின்றது என்ற கேள்விக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்;தைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உள்ளனர் என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

1 comment:

  1. "Ceylon Today" செய்தி உண்மையா அல்லது குண்டா என்ற விடயம் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். "தொப்பி பிரட்டிகள் சோனிகள்" என்ற பொய்யா மொழியினை உண்மையாக்காமல் இருப்பது என்பது நாங்கள் எமது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று இந்த உறுப்பினர்கள் எண்ணினார்களோ என்னவோ தெரியாது. முதலில் கட்சி மாறுதல் பின்னர் யாருடைய கை கால்களில் வீழ்ந்தாவது பதவிகளைப் பெறல் என்ற உன்னத கோடபாட்டிற்கு அமைவாக நடந்து பதவிகளைப் பெறுவதுதான் முக்கிய கடமையாக இருக்க வேண்டும். அமைச்சுப் பதவிகள் ஹக்கீம் மற்றும் றிசாத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. எல்வோருக்கும் பொதுவானது. சொந்தமானது. பொறுத்தது போதும் உறுப்பினர்களாக வந்தாகிவிட்டது. சந்தர்ப்பங்களை நழுவ விடாது பொங்கியெழுந்து பதவிகளைப் பெற முண்டியடித்து முன் நிற்போம். ஜெய் ஜக்கம்மா! ஜெய் மந்திரக்காளி!!

    ReplyDelete

Powered by Blogger.