August 29, 2020

18 வயதுக்குக் கீழான திருமணத்தை எதிர்க்கிறேன் - நீதியமைச்சர் அலிசப்ரி


- ஏ.ஆர்.ஏ.பரீல் -

பரிந்துரைக்கப்பட்டுள்ள, முஸ்லிம் விவாக,விவாகத்துச் சட்டத்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான கால எல்லையொன்றினை என்னால் தெரிவிக்க முடியாது. என்றாலும் கட்டாயமாக அவசரமாக நாம் இதனை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் ’ என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றி என்னிடமும் சில கருத்துகள் உள்ளன. என்றாலும் அமைச்சரவையே அரசியல் கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக நான் 18 வயதுக்குக் கீழான திருமணத்தை எதிர்க்கிறேன். இவ்வயதெல்லை எங்கும் பொதுவானதாகும். சவூதி அரேபியாவும் 18 வயதுக்குக் கீழான திருமணத்தை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளது. பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. மலேசியாவில் பிரதம நீதியரசராக பெண் ஒருவரே கடமையாற்றுகிறார். குறிப்பாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படவேண்டியுள்ளது.

இதே வேளை மேலும் பல  விடயங்களை நாம் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளது. 19 ஆவது திருத்தச் சட்டம் இதில் முக்கியமானது என்பதுடன் நீதித்துறை டிஜிட்டல் மயப்படுத்தப்படவேண்டியுள்ளது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதே வேளை இதனால் 13 ஆவது திருத்தத்திற்குப் பாதிப்பு ஏற்படாது.

நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதை ஒரு சில அடிப்படைவாதிகளே எதிர்க்கிறார்கள். பெளத்த அமைப்புக்கள் அல்ல. அவர்கள் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே. நான்  எப்போதும் தெரிவிப்பது என்னவென்றால் அடிப்படைவாதிகள் அனைத்துத் தரப்பிலும் இருக்கிறார்கள்.இலங்கை அனைத்து மக்களுக்குமான நாடாகும். அனைவரும் சமமாக கணிக்கப்படவேண்டும். இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

அமைச்சரவையில் நான் ஒருவனே முஸ்லிமாக இருக்கிறேன். இதே வேளை டக்ளஸ் தேவானந்தா மீன்பிடித்துறை அமைச்சராக அமைச்சரவையில் இருக்கிறார். நாமிருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சட்டத்துறையின் மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறையில் வழக்குகள் நீண்டகாலமாக தாமதிக்கப்படுகின்றமை என்பவற்றைக் கருத்திற்கொண்டே சட்டத்துறையில் அனுபவமுள்ள என்னை ஜனாதிபதி நீதியமைச்சராக நியமித்துள்ளார் என்றார். – Vidivelli

7 கருத்துரைகள்:

முஸ்லிம் சகோதர சகோதரிகளே, சிங்களவர் தமிழர் மலையகத்தமிழர் ஆதர்வில்லாத ஒரு கோரிக்கையை பல முஸ்லிம் நாடுகளே ஏற்றுக்கொண்ட மாற்றத்வேண்டுகிறேன். திருமண வயது 18 என்பதை நிராகரிப்பவர்கள் மீண்டும் ஒரு முறை சிந்திக்க வேண்டுமென கோருகிறேன். உங்களுக்காகவல்ல உங்களை தீவிரமாக நம்பும் உங்கள் பிள்ளைகள், உங்கள் இளைய தலைமுறை தீவிரவாதமே வழி என்கிற முடிவுகுள் தள்ளபடக்கூடாது என்பது என்கவலை. இனி உங்கள் பாடு.

முஸ்லிம் சகோதர சகோதரிகளே, நாடாளு மன்றத்திலும் வெளியிலும் சிங்களவர் தமிழர் மலையகத்தமிழரரும் கணிசமான முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்கிற கோரிக்கையாக திருமண வயது 18 என்கிற தீர்மானம் உள்ளது. பல முஸ்லிம் நாடுகளே ஏற்றுக்கொண்ட தீர்மானம் இது.. திருமண வயது 18 என்பதை நிராகரிப்பவர்கள் மீண்டும் ஒரு முறை சிந்திக்க வேண்டுமென கோருகிறேன். உங்களுக்காகவல்ல உங்களை தீவிரமாக நம்பும் உங்கள் பிள்ளைகளுக்காக நிதானமாகச் சிந்தியுங்கள். உங்கள் இளைய தலைமுறை தீவிரவாதமே வழி என்கிற முடிவுகுள் தள்ளபடக்கூடாது என்பதுதான் என் கவலை. இனி உங்கள் பாடு.

IT'S A FOOLISH DECISION, MARRIAGE IS A RIGHTS OF ALL ADULTS, THERE SHOULD NOT BE AGE LIMIT.

18 வயது என்பதை ஏன் முஸ்லிம்களுடன் மட்டும் சம்பந்தப்படுத்துகிறீர்கள் என்று புரியவில்லை?அது எல்லோருக்குமுள்ள பொதுப்பிரச்சினை. இலங்கையின் கல்விக் கொள்கைக்கமைய ஒருபிள்ளை உயர்தரம் வரையாவது கற்க வேண்டும். அந்த வகையில் 18 சாதாரண வயது?? அது எல்லா சமூகமும் பரிசீலிக்க வேண்டிய விடயம்???

Mr. Jayabalan, We follow the LAWS and ORDERS of ONE TRUE GOD of UNIVERSE.

Why you also limit the age to 18? Why not make it 28 or 38 ?

Remember these are human decision, which may change based on their interest and may be correct or wrong. When the west limits to 18 you also follow it.

Remember THE GOD's permission will not go wrong.

When we try to practice the religion of ONE TRUE GOD on earth, how come you call it "terrorism"? All these days, I thought you are an educated person. But you statment shows your status.

Stop calling musim as terrorist, when they try to follow the message of TRUE GOD.

NOW tell me, who decide this age limit to be 18 and what is the base for it? It is the WEST trying control the whole world by bringing their rules and you are simply and blindly accepting it.

Go back to your grand fathers time, you will find that they married at very yong age and their family life had no much problem like the families today. When the west delayed the marraige age, you can see how much destruction happend to their family life. These so called children of age 13, 14, 15,16 and 17 have illegal sex starting from school life and get destroyed their family life. The WEST wanted the same thing to happend in 3rd world country.

So far the 3rd countires have good family system. BUT if marriage life will be delayed, the same west culture will destroy us soon.

take care please.

திருமணத்திற்குத் வயதெல்லை போடுபவர்கலால் காதலுக்கு வயதெல்லை போட முடியுமா?

Post a comment