Header Ads



18 ஆவது தினமாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான நிலந்த


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாப்பதாக சிலர் குற்றம்சாட்டினாலும், தாம் எவரையும் பாதுகாக்கவில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிவுறுத்தாமை தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழு, கேள்வி எழுப்பிய போதே அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், நேற்று 17 ஆவது நாளாகவும் அவர் சாட்சியம் வழங்கியிருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களின் தரவுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இருவரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முற்பகல் 7.59க்கு 28 விநாடிகளும், 8 ஆம் திகதி முற்பகல் 7.18க்கு 17 விநாடிகளும், 9 ஆம் திகதி முற்பகல் 8.02க்கு 4 நிமிடங்களும் 14 விநாடிகளும், 12 ஆம் திகதி முற்பகல் 8.50க்கு 37 விநாடிகளும், அன்றைய தினமே இரவு 8.07க்கு 16 விநாடிகளும் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முற்பகல் 6.27க்கு 15 விநாடிகளும், 14 ஆம் திகதி இரவு 9.39க்கு 38 விநாடிகளும் 15 ஆம் திகதி இரவு 7.47க்கு 3 நிமிடங்களும் 19 விநாடிகளும் 20 ஆம் திகதி மாலை 6.16க்கு 1 நிமிடமும் 28 விநாடிகளும் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக மற்றுமொரு தொலைபேசி அழைப்பும் மேற்கொண்டதன் மூலம், மேற்கொள்ளப்பட்ட அனைத்து அழைப்புகளிலும், அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்புகொண்டார என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் வினவியுள்ளார்.

இதன்போது பதிலளித்துள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, குறித்த தொலைபேசி அழைப்புகளானது, ஜெப்டி வீதியில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

இதன்போது, தொலைபேசி அழைப்பு இணைப்பு பிரிவானது, சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க அளவு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியை தொடர்புகொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ள சூழ்நிலையில், தாக்குதல் தொடர்பில் அவருக்கு முன்னறிவித்தலை வழங்கவில்லை என ஆணைக்குழு மற்றுமொரு கேள்வியை தொடுத்தது.

இதற்கு பதிலளித்துள்ள நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 4 ஆம் திகதி வட்ஸ்அப் ஊடாக கிடைத்த முதலாவது முன்னறிவித்தலானது, ஆரம்ப தகவல் மாத்திரமே என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவருக்கு அறியப்படுத்தப்படவில்லை என்றும், ஏப்ரல் 7 ஆம் திகதி அது குறித்து, தேசிய புலனாய்வு சேவை பிரதானிக்கு அறிவித்ததாக நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 15ஆம் அல்லது 16 ஆம் திகதி பாதுகாப்பு சபை கூடியிருந்தால், முன்னறிவித்தல் தகவல் தொடர்பில் தம்மால் ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியிருக்க முடியும் என்றும், தாம் எவரையும் பாதுகாக்கவில்லை என்றும் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாக்குமூலம் வழங்கலான அவரின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய, பிற்போடப்பட்டதுடன், இன்றைய தினம் நிலந்த ஜயவர்தன 18 ஆவது தினமாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையானார்.

2 comments:

  1. உயர் அதிகாரிகள் அனைவருடைய தொலைபேசி மற்றும் பதிவுகள்
    அன்றைய அரசுத்தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருடைய தொலைபேசிகளை சோதனை இட்டாள் அது மட்டுமன்றி விசாரணையை அந்தப் பக்கம் கொண்டு சென்றாள் நிச்சயம் உண்மை வெளிவரும்....

    ReplyDelete
  2. Arrest X president Culprit Maithripala Sorisena for the assault..

    ReplyDelete

Powered by Blogger.