Header Ads



நாட்டில் 1400 பள்­ளி­வா­சல்கள் தன்னிச்சையாக நடக்கின்றன - நிதி, ஊழல், மோசடிகள் குறித்து புகார்


(ஏ.ஆர். ஏ. பரீல்)


நாட்டில் சுமார் 1400 பள்­ளி­வா­சல்கள் வக்பு சபை­யுடன் தொடர்­பு­களைப் பேணாது தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­கின்­றன. இவற்றில் பல பள்­ளி­வா­சல்­களில் நிதி ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக புகார்கள் கிடைத்­துள்­ளன. அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களின் சட்­ட­ரீ­தி­யற்ற நிர்­வா­கங்கள் கலைக்­கப்­பட்டு ஜன­நா­யக ரீதியில் புதிய நிர்­வா­கங்கள் அமைக்­கப்­ப­ட­வேண்டும்.  வக்­பு­ச­பையின் தொடர்­பு­களைப் பேணாது தன்­னிச்­சை­யாகச் செயற்­படும் நிர்­வா­கங்­க­ளுக்கு  எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்க வக்­பு­சபை தீர்­மா­னித்­துள்­ளது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.


வக்­பு­ச­பையின் தலைவர் இது தொடர்பில் தொடர்ந்தும் ‘விடி­வெள்ளி’ க்குக் கருத்து தெரி­விக்­கையில்,  இவ்­வா­றாக தன்­னிச்­சை­யாக  செயற்­படும் பள்­ளி­வா­சல்கள் நீண்ட கால­மாக வக்பு சபை­யுடன் தொடர்­பு­க­ளின்றி இருக்­கின்­றன. அவற்றின் வரவு செல­வுகள் என்­பன வக்பு சபைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. நிர்­வாக சபை­யி­லுள்ள சிலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தாக புகார்கள் கிடைத்­துள்­ளன. இவ்­வா­றான நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. வக்பு சபையின் சட்­ட­வி­தி­க­ளுக்கு அமைய அவர்­க­ளுக்கு எதி­ராக நீதீ­மன்றின் மூலம் நட­வ­டிக்கை எடுக்க முடியும்.


வக்பு சொத்­துகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். வரவு செல­வுகள் வரு­டாந்தம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும் இவ்­வாறு வரவு செலவு சம்ர்ப்­பிக்­கப்­ப­டாது ஒரு சில நிர்­வா­கிகள் மோச­டி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என்றார்.


3 comments:

  1. இலங்கையின் வக்பு சொத்துக்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு அதன் மூலம் வருகின்ற வருமானங்களை கொண்டு முஸ்லீம் சமூக கல்வி அபிவிருத்திக்கு பயன் பெற செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. Also this Waqf committee should help needy Masjids for healthy developments. Further introduce the WAQF committee,s responsibility, authority and duties towards the society to Muslim public in the country.

    ReplyDelete
  3. எல்லா பள்ளிவாசல்கள் + மத்ரஸாக்கள் வக்ப் சபையின் கீழ் வரணும் ஏனைய அமைப்புகள் இல்லாமல் ஆக்கப்பட்டு மஸ்ஜிதுகளின் கீழ் சமூகம் ஒன்றிணைக்கப்படல் வேண்டும், நிர்வாகிகளாக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரசூல் ஸல் கூறியவாறு நிர்வாகிகளை (அறிவுசார்ந்தவர்களும் உள்வாங்கப்பட்டு) வக்ப் சபையின் பொறுப்பானவர்கள் மூலம் நியமிக்கப்படல் வேண்டும்.
    ஒரு ஊரில் கோரம் இல்லாமையினால் வீடுவீடாக சென்று கையொப்பங்களை பெறப்பட்டு நிர்வாக சபைகள் வக்ப் சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது,அது மட்டுமல்ல பல மஸ்ஜிதுகளிலும்,பல இயக்கங்களிலும் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் இடம் கொடுக்க கூடாது (எமது ஊரில் நடந்ததை கூறுகிறேன்) ஆகவே தகுதி இல்லாதவர்கள் ஓரங்கட்டப்பட்டு தகுதியானவர்கள் உள்வாங்கப்படணும்

    ReplyDelete

Powered by Blogger.