Header Ads



மைத்திரியிடம் 10 மணி நேரம் வாக்குமூலம் பதிவு


ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் 10 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் சற்று முன்னர் மைத்திரியின் இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்கள்.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த அதிகாரிகள் இன்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றனர்.


குறித்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக முன்னிலையாகுமாறு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், தமது இல்லத்திற்கு வருகைதந்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணைக்குழுவிடம் கோரியிருந்தமை குறிப்பிடதக்கது.

1 comment:

  1. Ten hours to record Maithri's Statement. How long to make sense of it? Ten months? Ten years??

    ReplyDelete

Powered by Blogger.