Header Ads



தனது 100 பேச்சஸ் காணியை பணம் ஏதும் வழங்காது, அங்கொட லொக்கா கைப்பற்றியதாக ஒருவர் முறைப்பாடு


இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் திட்டமிட்ட குற்றங்களை புரியும் குழுவின் தலைவரான அங்கொட லொக்கா என அழைக்கப்படும் லசந்த சமிந்த பெரேராவிற்கு எதிராக மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவிற்கு இதுவரை 3 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


அங்கொட லொக்காவினால் தமது காணி பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறி, முல்லேரியா பகுதியை சேர்ந்த ஒருவர் முறைப்பாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.


சுமார் 100 பேச்சஸ் காணியை பணம் ஏதும் வழங்காது அங்கொட லொக்காவின் ஆலோசனைக்கு அமைய அவரது உதவியாளர்களால் இவ்வாறு பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் வீடொன்றும் பலவந்தமாக அங்கொட லொக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை, வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான லடியா எனப்படும் தினமுல்ல கங்கானமிலாகே நளின் சத்துரங்கவின் உதவியாளரான சுத்தா எனப்படும் அலஹகோன் ஆராச்சிகே யொஹான் பிரதீப் குமார என்பவர் ஹோகந்தரை பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


நேற்று மாலை இந்தக் கைது இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


குறித்த கைதின்போது, திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.