Header Ads



தூய்மையான பச்சை நிறம் எங்களிடம் உள்ளது, UNP காலில் பிடித்து இழுக்க முயற்சி

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வர்ணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒவ்வொரு விடயங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரை காலில் பிடித்து இழுக்க முயற்சித்து வருகின்றனர். எம்மை கால் தடைகளை போட்டு வீழ்த்த முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வேண்டாம் எனக் கூறினார்கள். வழக்கொன்றையும் தாக்கல் செய்தனர், அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. தற்போது கட்சியின் பச்சை வர்ணம் பற்றிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சேறுப்பட்ட பச்சை நிறம் அங்குள்ளதாக நினைக்கின்றேன்.

தூய்மையான பச்சை நிறம் எங்களிடம் உள்ளது. எமது கட்சி பச்சை மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் எங்களிடம் இருப்பதால் நாங்கள் பச்சை நிறத்தை பயன்படுத்தியுள்ளோம். மஞ்சள் நிறத்தையும் நாங்களே தெரிவு செய்தோம். தற்போது எமது கட்சியிலேயே அனைத்து இனப் பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதை நடவடிக்கை பாலர் பாடசாலை பிரச்சினை. இந்த தேர்தல் நேரத்தில் வர்ணத்தை பிடித்துக்கொண்டு சண்டையிட பார்க்கின்றனர். இறுதியில் மஞ்சள் நிறமும் அவர்களுடையது எனக் கூறுவார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தை பயன்படுத்திய போது வாயை மூடிக்கொண்டு இருந்தனர். இங்கு வர்ணம் அல்ல பிரச்சினை, வாக்குகள் இல்லாத காரணத்தினால், பல பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.