Header Ads



UNP மீதான வெறுப்பினால் சஜித் கட்சியை பிளவுப்படுத்தியுள்ளார், ஒரு ஆசனங்களையேனும் கைப்பற்றுமா என சந்தேகம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தம்  ஆகிவயற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றில்  இரண்டு பெரும்பான்மை  அவசியமாகும் என பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை   மன்ற  கல்லூரியில்  இடம் பெற்ற யுதுகம அமைப்பின்   நிகழ்வில் கலந்துக்  கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் எத்தன்மையானது. அவற்றின் பிரதிபலன் என்பதை அனுபவ ரீதியில் அனைவரும் தற்போது தெரிந்துக்கொண்டுள்ளோம். இவ்விரு   திருத்தங்களையும் மாற்றியமைத்து நாட்டுக்கு  பொருந்தும் வகையில்  முரண்பாடற்ற விதத்தில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன்   பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

வரலாற்றில்  எக்காலத்திலும் இல்லாத  வகையில்  சர்வதே  சூழ்ச்சிகள்  2015 ஆம் ஆண்டு  செல்வாக்கு செலுத்தின  எமது அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. காலி முகத்திடலில் இருந்து  கொள்ளுப்பிடி வரையான நிலங்களை  ராஜபக்ஷர்கள் ஆக்கிரமித்து விட்டதாகவும்,  டுபாய்  நாட்டில்  வங்கி கணக்கில்   பெருமளவான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியினை   பார்த்ததாகவும் ஒரு தரப்பினர் குறிப்பிட்டார்.  இவ்வாறான  போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

 ஐக்கிய தேசிய  கட்சி இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.  தேர்தல் தொகுதிகளில் ஒரு ஆசனங்களையேனும் கைப்பற்றுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.   ஐககிய மக்கள்  சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ  ஐக்கிய  தேசிய கட்சி மீது கொண்டுள்ள வெறுப்பினால் கட்சியை  பிளவுப்படுத்தியுள்ளார்.  

நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்பும் திட்டங்களை  ஜனாதிபதி வகுத்துள்ளார். அத்திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கத்தை மக்கள் தோற்றுவிக்க வேண்டும். முரண்பாடான  தன்மை மீண்டும் தோற்றம் பெற்றால்  எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் பெறாது. ஆகவே   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை  தோற்றுவிக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.