Header Ads



UNP யை சரியான பாதைக்கு எடுத்து செல்லாவிட்டால், ரணிலை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்துவோம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சியை சரியான பாதைக்கு எடுத்துச்செல்லாவிட்டால் ரணில் விக்ரமசிங்கவை தலைமை பதவியில் இருந்து நீங்குமாறு வலியுறுத்துவோம் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தேர்தலுக்கு பின்னர் கட்சியை மீண்டும் பலம் மிக்கதாக கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.

வளப்பனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி சென்றிருப்பவர்கள் தொடர்பில் நாங்கள் கவலைப்பட மாட்டோம். அவர்கள் சென்றாலும் கட்சி ஆதரவாளர்கள் எங்களுடனே இருக்கின்றனர். அதனால் கட்சியைவிட்டு செல்லாமல் கட்சியை பாதுகாத்த ஆதரவாளர்களை தேர்தலுக்கு பின்னர் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.

1 comment:

  1. ஐ தே க வை சரியான பாதைக்கு இட்டுச் செல்லாததனால் தான் ஐக்கிய மக்கள் சக்தி தோற்றம் பெற்றது.அது ஸஜித் அணிக்கு எப்பவோ விளங்கி விட்டது.உங்களுக்கு இப்போது தான் மெல்லப் புரிய ஆரம்பித்திருக்கிறது.நீங்கள் அது விளங்கியும் விளங்காமல் நடித்தது பிறகு ஐ தே கவின் தலைமைக்கு குறிவைத்தே.அது நடக்காது.தேர்தலின் பின் ஸஜித் அணி கூடுதல் ஆசனங்கள் வென்று ஐ தே க தலைமையை கைப்பற்றும் அப்போது நீங்களெல்லாம் கட்சியில் எங்களுக்குக் கீழ் தான்.நீங்கள் ஏற்கன்வே கட்சி மாறி மஹிந்தவிடம் போய் வந்தவர் தானே.கட்சி பின்னோக்கிச் செல்ல ரனில் மாத்திரமன்றி நீங்களும் ஒரு காரணம்.

    ReplyDelete

Powered by Blogger.