Header Ads



தாயின் இறுதி நேர வார்த்தைகளை நெஞ்சில் சுமந்த Dr பர்சானா



இங்கிலாந்தில் பெயரை ஒளிரச்செய்த முஸ்லீம் மருத்துவர் டாக்டர் பர்ஜானா உசைன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Dr. Farshana Hussain லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.. தனது 19ம் வயதில் மருத்துவகல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயை பார்க்க சென்ற பர்சானாவிடம், "எனக்கு ஒன்றும் ஆகாது. நீ கல்லூரி சென்று படித்து சிறந்த மருத்துவர் ஆகி ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் " என்று தைரியம் கொடுத்த தாய் அடுத்த ஐந்து தினங்களில் மரணித்து விட்டார். 

தாயின் இறுதி நேர வார்த்தைகளை நெஞ்சில் சுமந்து மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவதுறையில் பர்சனவின் வியத்தகு சேவைகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டில் மிகப்பெரிய கவுரவத்தை தேடி தந்துள்ளது. கொரோனா பாதிப்பு லண்டனில் உச்சத்தில் இருந்த ஆரம்ப நாட்களில் பிரபல மருத்துவனைகள் சிகிச்சையளிக்க தயங்கிய போது ஆங்காங்கே முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு துணிச்சலாக சிகிச்சை அளித்தவர். National Health Services NHS அமைப்பு ஜூலை 4 ல் தங்களது 72 வது ஆண்டுவிழா நிகழ்வுகளையொட்டி பர்சானாவின் கோவிட் கால சேவைகளை கவுரவித்து "Docto

டாக்டர் பர்ஜானா உசேனின் அளவற்ற மனிதநேய சேவை

கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றியதற்காகவும், இரவு பகல் பாராமல் ஆற்றிய சேவைக்காகவும் இங்கிலாந்து அரசால் கவுரவிக்கப் படும் விதமாக லண்டன் பிக்காடெலி சர்க்கிளில் கம்பீரமாக காட்சியளிக்கும் டாக்டர் பர்ஜானா உசேனின் புகைப்பட பேனரை வைத்துள்ளனர்!...

Mareena Reffai


No comments

Powered by Blogger.