Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளானோரின், எண்ணிக்கை அதிகரிக்கலாம் - Dr அனில் எச்சரிக்கை


(எம்.மனோசித்ரா)

வெவ்வேறு பிரதேசங்களில் நோயாளர்களை இனங்காண்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் மக்களும் வெவ்வேறு குழுக்களும் இந்த நிலைமையை உதாசீனப்படுத்தும் நிலைமையே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலைவரம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெளிவுபடுத்துகைலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஓரளவு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனார் அதனார் பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. எனினும் இராஜாங்கனையில் இனங்காணப்பட்ட நபர் வெளியிடங்களுக்குச் சென்றுள்ளார். அவரது மனைவி மற்றும் மகளும் வெளியிடங்களுக்குச் சென்றுள்ளமையே தற்போது பிரச்சினையாகும்.

இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள தொழிநுட்ப குழு கூடியது.

இதில் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிகக் கூடும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான பலம் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புதுறையினரிடம் காணப்படுகின்றது. இவர்களால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் வௌ;வேறு பிரதேசங்களில் நோயாளர்களை இனங்காணபதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் மக்களும் வௌ;வேறு குழுக்களும் இந்த நிலைமையை உதாசீனப்படுத்தும் நிலைமையே காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் எம் ஒவ்வொருவருக்கும் தொற்றாமல் இருப்பதற்கான செயற்பாடுகளை முழுமையாக மீறியே இவர்களனைவரும் செயற்படுபடுகின்றனர் என்பது குறிப்பிட்டு கூற வேண்டிய விடயமாகும் என்றார். 

1 comment:

  1. 'Treat people with dignity and kindness for we share the same Creator.  Your life will attract positively, earning the pleasure of Almighty.'

    'You may be the healthiest person physically but if you have jealousy in your heart, you're sick.  You're always sick till you get rid off.'

    - Mufti Menk in 'Motivational Movements.

    ReplyDelete

Powered by Blogger.