Header Ads



லண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain


Dr. Farshana Hussain..

லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது..

தனது 19ம் வயதில் மருத்துவகல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயை பார்க்க சென்ற பர்சானாவிடம், 

"எனக்கு ஒன்றும் ஆகாது. நீ கல்லூரி சென்று படித்து சிறந்த மருத்துவர் ஆகி ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் " என்று தைரியம் கொடுத்த தாய் அடுத்த ஐந்து தினங்களில் மரணித்து விட்டார்.

தாயின் இறுதி நேர வார்த்தைகளை நெஞ்சில் சுமந்து மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவதுறையில் பர்சனவின் வியத்தகு சேவைகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டில் மிகப்பெரிய கவுரவத்தை தேடி தந்துள்ளது.

கொரோனா பாதிப்பு லண்டனில் உச்சத்தில் இருந்த ஆரம்ப நாட்களில் பிரபல மருத்துவனைகள் சிகிச்சையளிக்க தயங்கிய போது ஆங்காங்கே முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு துணிச்சலாக சிகிச்சை அளித்தவர்.

National Health Services NHS அமைப்பு ஜூலை 4 ல் தங்களது 72 வது ஆண்டுவிழா நிகழ்வுகளையொட்டி  பர்சானாவின் கோவிட் கால சேவைகளை கவுரவித்து "Doctor of the Year " விருது வழங்கியதுடன் லண்டன் முழுவதும் டிஜிட்டல் திரைகளில் அவரது சேவைகள் நினைவுகூறப்பட்டது. 

Colachel Azheem

4 comments:

  1. தாயின் பயிற்சி

    ReplyDelete
  2. Masha allah அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete

Powered by Blogger.