Header Ads



ஜிஹாத், வஹாபிஸம், சூபிசம், தவ்ஹீத் தொடர்பான விளக்கங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆதாரங்களுடன் முன்வைத்த CTJ


தற்கொலை பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் இன்று (08.07.2020) சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் இரண்டாம் நாளாக கலந்து கொண்டு வாக்குமூலம் வழங்கினார். 

இன்றைய தினம் வழங்கிய வாக்கு மூலத்தில்,

தவ்ஹீத் என்றால் என்ன? தவ்ஹீத்வாதிகள் என்றால் யார்? என்பது பற்றிய முழுமையான விளக்கங்கள் குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தெளிவூட்டப்பட்டதுடன் இஸ்லாம் என்றால் தவ்ஹீத் தான் என்பதும் விரிவான ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டது.

ஜிஹாத் என்றால் என்ன? ஜிஹாதுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் யார் மீது ஜிஹாத் கடமை? பயங்கரவாத இயக்கங்கள் செய்யும் காரியங்கள் ஜிஹாத் அல்ல அவை பயங்கரவாதம் தான் என்பது உரிய முழுமையான ஆதாரங்களுடன் விசாரனை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டதுடன், பயங்கரவாத்தில் ஈடுபட்டு அனியாயமாக மனிதர்களை கொலை செய்வோர் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் நரகத்திற்குறிய பாவிகளே தவிர அவர்கள் தூய்மையானவர்கள் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது. 

அதே போல், இஸ்லாமிய இயக்கங்கள் பற்றிய முழுமையான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், இஸ்லாமிய இயக்கங்கள் பல உருவாகியமைக்காக காரணங்களும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் மத்ரஸாக்களின் செயல்பாடுகள்,  அரபு மொழி பயன்பாடு மற்றும் மத்ரஸாக்களின் உருவாக்கம் அதன் தேவைகள் பற்றிய தெளிவுகள் வாக்குமூலமாக போதிய ஆதாரங்களுடன் வழங்கப்பட்டது.

அதே போல், வஹாபிஸம் தீவிரவாதமா? வஹாபிஸம் என்றால் என்ன? முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் யார்? அவர் எழுதிய புத்தகங்கள் பற்றிய விபரங்கள். தவ்ஹீத் வாதிகள் யார்? தவ்ஹீதுக்கும் வஹாபிஸத்திற்கும் என்ன தொடர்பு? போன்ற வஹாப் வாதம் பற்றிய முழுமையாக விளக்கங்கள் வாக்குமூலமாக ஆதாரங்களுடன் வழங்கப்பட்டது.

சூபிஸம் என்றால் என்ன? பாரம்பரிய முஸ்லிம்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கை கோட்பாடுகள் என்ன? தவ்ஹீதுக்கும் சூபிசம் மற்றும் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது பற்றிய தகவல்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டது. 

புலஸ்தினி என்ற ஸாரா இஸ்லாத்தில் இணைந்தது எப்போது? அவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் என்ன தொடர்பு? ஸாரா மீண்டும் இஸ்லாத்தை விட்டும் இயக்கத்தை விட்டும் வெளியேறியமைக்கான ஆதாரங்கள் போன்ற அனைத்து விவகாரங்களும் சாரா புலஸ்தினி விஷயமாக முழுமையான ஆதாரங்களுடன் ஒப்படைக்கப்பட்டன.

அதே போல், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகவும், தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராகவும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வருவது ஏன் என்பது பற்றியும் குறித்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் விமர்சனங்களுக்கான பதில்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன.

மீண்டும் மூன்றாம் கட்ட வாக்குமூலம் இன்னொரு நாளில் பதிவு செய்யப்படவுள்ளது.

ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ

No comments

Powered by Blogger.