Header Ads



நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவு வாக்குப்பதிவுகளே இடம்பெறலாம் - CMEV


கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என்று தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (CMEV)தெரிவித்துள்ளது.

இது குறித்த அந்த அமைப்பின் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 83 வீத வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குபதிவுகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் பொதுவாக எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்க விரும்புகிறார்கள், எனினும், இந்த முறை அப்படி இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் என்பது வயதானவர்களுக்கு ஒரு தடுப்பாக இருக்கும் என்றால், தேர்தலுக்கு செல்ல உதவி தேவைப்படலாம்.

மேலும் இம்முறை 5 பேரில் 3 பேர் வாக்களிக்க மாட்டார்கள் அல்லது தங்கள் வாக்குகளை வீணடிப்பார்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.