Header Ads



முஸ்லிம் சமூகத்தினர் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் – பிரதமர் நம்பிக்கை


முஸ்லிம் சமூகத்தினர் பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மா னத்தை எடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி- உடுலகல பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை -30-இடம்பெற்ற பேரணியில் தெரிவித்ததாவது,

முஸ்லிம் சமூகத்தினருக்கும் எமக்கும் கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளினால் இடைவெளி ஏற்பட்டது. அவை இம்முறை திருத்திக் கொள்ளப்படும். முஸ்லிம் சமூகத்தினர் பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுத்து பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கு வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எமது அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாக்கப் பட்டுள்ளதுடன். அவர்களுக்கு முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய அரசாங்கத்தில் 28 முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அங்கம் வகித்தார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் காத்தான் குடி பள்ளிவாசல் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது முஸ்லிம் சமூகத்தினருக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இனங்களை அடிப்படையாகக் கொண்டு எமது ஆட்சியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை பிரஜைகளுக்கே அபிவிருத்திகள் முன்னெடுக்கப் பட்டன.

இனவாத கொள்கைகள் பௌத்த மதத்திற்கு முரணானது . அனைத்து இன மக்களுக்கும் சிறந்த சேவையாற்றியுள்ளோம் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. dear srilankan

    donot belive his sweet word ,, dont vote

    ReplyDelete
  2. if vote for rajpaksa thugs, unp, slfp ,equal to do suicide for yourself

    ReplyDelete
  3. மஹிந்த ராஜபக்ஷவின் தயவான கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்,என்று முஸ்லீம் குரல் ("The Muslim Voice") 2015 முதல் இருந்து இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் கோதபய ராஜபக்ஷ புதிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், எங்கள் “மாத்ருபூமியா” என்கிற மக்களிடமிருந்தும் கேட்கிறார். இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய எஸ்.எல்.பி.பி முஸ்லீம் கூட்டமைப்பிட்கு இது சரியான தருணம். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
    (அல்குர்ஆன் : 5:50)
    www.tamililquran.com

    ReplyDelete
  5. My self never vote Pohottuwa

    ReplyDelete
  6. அநேகமான முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு option (சஜித் ஜனாதிபதி ஆகணும்) கொடுத்து துஆ கேட்டார்கள் இது தான் கசப்பான உண்மை mr Mahibal M Fassy நீங்களும் தான் உங்களுக்கு (ஐ தே க அல்லது அதைச்சார்ந்த) சார்பாக வரும்போது குர்ஆனை தூக்க மாட்டீர்கள்
    உண்மையில் ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் இதனை நம்பும் ஒவ்வொருத்தரும் இது வரை ஏமாற்றியவர்களை தூர வீசிவிட்டு புதியவர்களின் நடவடிக்கைகளில் நம்புபவர்களை தெரிவு செய்யலாம்

    ReplyDelete

Powered by Blogger.