Header Ads



சூரிச் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னே, பெண் காப்பாளரை கொன்ற புலி


சுவிட்சர்லாந்தின் சூரிச் வனவிலங்கு பூங்காவில் பார்வையாளர்கள் கண் முன்னே பெண் காப்பாளரை புலி ஒன்று காயப்படுத்தி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் அந்த 55 வயது பெண் காப்பாளரை காப்பாற்ற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணானதாக சூரிச் பொலிஸ் தரப்பு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி சுமார் 1 மணியளவில் இரினா என்ற அந்த சைபீரியன் புலி தனது காப்பாளரை தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தால் திகிலடைந்த பார்வையாளர்கள் துரிதமாக செயல்பட்டு, எச்சரிக்கை மணியை அழுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் பலர் உடனடியாக செயல்பட்டு, புலியை சாந்தப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த 55 வயது காப்பாளர் காயங்களால் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த காப்பாளர் பல ஆண்டுகளாக சூரிச் வனவிலங்கு பூங்காவில் பணியாற்றியவர் எனவும், ஆனால் அந்த புலியானது இளம் வயது என்பதாலும், அது அதன் குணத்திற்கு ஏற்றவாறு நடந்து கொண்டிருக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த புலியானது 2015ல் டென்மார்க் நகரம் ஒன்றில் பிறந்து, கடந்த ஓராண்டாகவே சூரிச் வனவிலங்கு பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை நேரில் பார்த்த பார்வையாளர்கள் மற்றும் பூங்கா ஊழியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.